அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசினை தொல்லை தரும் ஒரு நாய் என்று கூறியதன்வழி அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசீஸ் முகைதினை மட்டுமல்லாமல் ஜோகூர் மக்கள் அனைவரையுமே அவமதித்து விட்டார்.
அதற்காக அவர் ஜோகூர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாகோ அம்னோ இளைஞர் தலைவர் முகம்மட் ஜைட் அப்துல் ரஹ்மான் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“ஒரு அமைச்சர் இப்படி வெறுக்கத்தக்க முறையில் பேசியதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் எங்களை மட்டுமல்லாமல் ஜோகூர் மக்கள் அனைவரையுமே அவமதித்து ஆத்திரப்பட வைத்திருக்கிறார் ”, என்று முகம்மட் ஜைட் கூறினார்.
நஸ்ரி ஜோகூர் மக்களை அவமதிப்பது இது முதல் தடவை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சர் கடந்த ஆண்டு ஜோகூர் பட்டத்திளவரசருடன் சர்ச்சையில் ஈடுபட்டதைத்தான் அவர் குறிப்பிடுகிறார்.
மன்னிப்பு ? அவன் பரம்பரைக்கே கிடையாதே.
நாய்க்கு உள்ள தன்மை இல்லாத கபோதி.
துவாங்கு அவர்களே நஸ்ரி மன்னிப்பு கேட்க வில்லைவேன்றால் ஜொகூர் மாநிலத்தில் நுழைய விடாதீர்கள்.