பாலர்பள்ளி ஆசிரியர் இந்திரா காந்தி இஸ்லாத்திற்கு மாறி விட்ட அவரது முன்னாள் கணவர் அவரது குழந்தைகளை ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்தது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். உச்சநீதிமன்ற விசாரணையின் போது அந்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் – தலைமை நீதிபதி அரிப்பின் ஸாக்காரியா மற்றும் மேல்மூறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் முகமட் ராவுஸ் ஷாரிப் – அதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று மனு செய்துள்ளார்.
இக்கோரிக்கைக்கான காரணம் இவ்விரு நீதிபதிகளும் கடந்த காலத்தில் ஒருதலைப்பட்சமான மத மாற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று இந்திரா காந்தியின் வழக்குரைஞர் மு. குலசேகரன் கூறினார்.
நாட்டு மக்களின் மக்கள்தொகையின் அடிப்படையில் பல்லின மற்றும் பலசமய நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கும் நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம். அவர்களில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலரும் இருக்க வேண்டும். மேலும், உச்சநீதிமன்றத்தின் இதர நீதிபதிகள் இவ்வழக்கை செவிமடுக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளோம் என்றாரவர்.
குலா உங்களுக்கு பாராட்டுக்கள் , குருடு நீதிபதி வெளிச்சம் காட்ட முடியுமா ?
மலாய்க்கார அம்னோ நீதி தேவன்கள் எமன்கள். தகுதி திறமையில் அந்த இடங்களில் உட்கார்ந்து இருந்தால் கொஞ்சமாவது ரோசம் இருக்கும் -அம்னோவின் திறமையினால் எல்லாமே மழுங்கி போய் விட்டதே? பிறகு எப்படி மதிப்புடன் செயல் படுவான்கள்.
இரண்டு பேர் போனால் அதே புத்தி உடைய இரண்டு பேர் வரப் போகின்றார்கள். அப்புறம் என்ன?
நங்கள் உங்களுடன் இருக்கின்றோம் கவலைபடாதிர்கள் கடைசிவரை போராடுவோம்.
எல்லாத்துறைகளிலும் ஒரே கோமாளிகள்வரவர நம் நாட்டு நடப்பு செய்திகளை படிக்கவே அருவருப்பாக இருக்கிறது கார்ட்டூன் காமடிப்போல் !