நல்லிணக்கத்தை அடைய இலங்கை நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது! அமெரிக்கா

nisha_biswal_001நல்லிணக்கம் மற்றும் நீதி என்பவற்றுக்காக இலங்கை இன்னும் அதிக பணிகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது என்று அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான பிரதி ராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இலங்கையால் இந்த பணிகளை தனித்து நிறைவேற்றமுடியாது. எனவே அமெரிக்க நண்பனாகவும் பங்களாராகவும் இலங்கைக்கு உதவும் என்று ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி குறிப்பிட்டுள்ளமையை பிஷ்வால் சுட்டிக்காட்டியுள்ளார்.

போரினால் பிளவுப்பட்டிருந்த இலங்கையில் தற்போது ஜனநாயகம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மக்கள் பழைய ஆட்சியை நிராகரித்து 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியன்று பிளவுகள் மற்றும் பயம் என்பவற்றுக்கு எதிராக வாக்களித்து இந்த ஜனநாயகத்தை ஏற்படுத்தினர் என்றும் பிஷ்வால் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் சமாதானத்துக்கான நிறுவகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

பல செங்குத்தான மலைகளையும் பல திருப்பு பாதைகளுடன் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கையின் பயணம் இன்னும் மடியாமல் தொடர்கிறது.

இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டின் எதிர்கால சமாதானத்துக்காக பணியாற்றுகின்றனர்.

உடைந்துப்போயிருந்த ஜனநாயகத்தையும் சர்வதேச உறவுகளையும் சீர்செய்து வருகின்றனர். இந்த விடயத்தில் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவும் முக்கிய பங்கை ஆற்றியுள்ளார் என்றும் பிஷ்வால் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் மங்கள சமரவீரவின் தோள்களில் எதிர்ப்பார்ப்புக்களும் பொறுப்புக்களும் அடங்கிய பெரும் சுமை சுமத்தப்பட்டுள்ளன. எனினும் தம்மை பொறுத்தவரையில் மங்கள சமரவீரவின் பரந்த எண்ணங்களும் ஆழமான அர்ப்பணிப்பும் தமக்குத் தெரியும் என்று பிஷ்வால் கூறியுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: