இது தன் எனது மகன்: சனல் 4 வெளியிட்ட வீடியோவில் எனது மகன் இருக்கிறான் !

சனல் 4 ஊடகம் வெளியிட்ட இலங்கையின் போர்குற்ற ஆதார புகைப்படத்தில், காணாமல் போன தமது மகனும் உள்ளாரென ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் பெற்றோர் சாட்சியமளித்துள்ளனர்.யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற, காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வில் குறித்த பெற்றோர் சாட்சியமளித்துள்ளனர். தமது மகன் குறித்து அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்

‘எமது மகனான புஸ்பராஜா அஜிந்தன், (காணாமல் போகும் போது வயது 17 ) மாத்தளன் பகுதி ஊடாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரும்போது, கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி காணாமல் போனார்.நாம் முகாமுக்கு வந்து மகனை பற்றி விசாரித்தபோது, இராணுவம் பிடித்து வைத்திருந்ததை கண்டதாக சிலர் கூறினர். அதன் பின்னர் மகனைப் பற்றிய தகவல் இல்லை.

கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி சனல் 4 ஊடகம், இலங்கையின் போர்க்குற்ற ஆதார புகைப்படங்களை வெளியிட்டதாக பத்திரிகைகளில் புகைப்படங்கள் வெளியாகின. அதில் ஒரு புகைப்படத்தில் எது மகனும் உள்ளார். ஆகவே அவரை கண்டுபிடித்து தாருங்கள்’ என ஆணைக்குழுவிடம் குறித்த பெற்றோர் உருக்கமாக கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.

-http://www.athirvu.com

TAGS: