இன்னும் 300 புலிகள் எம்மிடம் முகாம்களில் உள்ளார்கள்- ஒத்துக் கொள்ளும்மேஜர் ஜெனரல் ரத்நாயக்கா

300puliமுன்னர் இருந்த இலங்கை அரசாங்கம் , தடுப்பு முகாமில் இனி எந்த ஒரு விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும் இல்லை என அறிவித்தார்கள். இதேபோல தற்போது உள்ள ரணில் அரசாங்கமும் , இனி எங்களிடம் யாரும் இல்லை. காணமல் போனவர்கள் இறந்துவிட்டதாக தான் கருதவேண்டும் என்று யாழில் வைத்துப் பேசும்போது குண்டைத் தூக்கிப் போட்டார். இதனால் அவர் சொன்ன கருத்து பெரும் விவாதத்திற்கு உள்ளானதோடு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலையிலும் இடி விழும் செயலாக அமைந்தது.

இன் நிலையில் தான் வவுனியாவில் பூந்தோட்டத்தில் உள்ள புனர்வாழ்வு முகாமில் 14 முன்னாள் போராளிகளை விடுவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் புனர்வாழ்வு அதிகாரி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜெ.ஏ.ரத்நாயக்கா சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே தம்மிடம் 300 போராளிகள் மட்டுமே உள்ளார்கள் என்ற செய்தியை தெரிவித்துள்ளார்.2009ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுவரையில் 12ஆயிரம் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் தற்போது 300 பேர் மாத்திரமே புனர்வாழ்வு பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

இது இவ்வாறு இருக்க , வெளிநாட்டில் வசித்து வரும் புலிகள் உறுப்பினர்களுக்கும் தாம் புணர்வாழ்வு கொடுக்க இருப்பதாக மற்றுமொரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். இக்கருத்தானது தற்போது பல வெளிநாடுகளுக்கு இலங்கை அரசால் சொல்லப்பட்டு வருகிறது. இதனூடாக விசா இல்லாமல் இருக்கும் பல முன் நாள் புலிகள் உறுப்பினர்களை , இலங்கைக்கு திருப்பி அனுப்பலாம் என்ற விடையத்தை இலங்கை அரசு நாசூக்காக சொல்லி வருகிறது.

-http://www.athirvu.com

TAGS: