நிலங்களை மீள கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

resizedயாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த தங்களை மீள்குடியேற்றக் கோரி 32 நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்கள் தொடர் உண்ணா விரதப் போராட்டத்தை இன்றைய தினம் காலை 8.30 மணிக்கு தொடங்கியிருக்கும் நிலையில் மாலை 5 மணி வரையில் கு றித்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

பலாலி விமான நிலையம், மயிலிட்டி துறைமுகம் விஸ்த்தரிப்பிற்காக பொதுமக்களுடைய நிலங்களை சுவீகரிப்பதை நிறுத்தவேண்டும், ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மக்களுடைய நிலங்களை மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வந்து மேற்படி உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தப்படுகின்றது.

இன்றைய தினம் மருதனார் மடம் கண்ணகி முகாமில் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் காலை 8.30 மணிக்கு தொடங்கியது.

மக்கள் தங்களுடைய நிலங்களை மீள்குடியேற்றத்திற்காக உட னடியாக விடுவியுங்கள், விமான நிலையம், துறைமுகம் விஸ்த்தரிப்பிற்காக மக்களுடைய நிலத்தை எ டுக்காதீர்கள் என்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகை

தாங்கியவாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அரசியல் கட்சிக ள் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ச்சியாக 32 முகாம்களிலும் பிரதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ளதாக ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

-http://www.tamilwin.com

TAGS: