1எம்டிபி மீதான தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை அதிகாரத்துவ இரகசியக் காப்புச் சட்ட(ஓஎஸ்ஏ)த்தின்கீழ் ஒரு இரகசிய அறிக்கையாக வகைப்படுத்தப்பட்டது நீதிக்குத் தடைபோடும் செயலாகும் என ஊழல்-எதிர்ப்பு என்ஜிஓ ஒன்று சாடியுள்ளது.
“கணக்கறிக்கையின் நோக்கமே பொது நிதிகள் தொடர்பில் ஊழல் நிகழ்ந்ததாக என்பதைக் கண்டறிவதுதான் என்கிறதுபோது, இச்செயல் அந்த நோக்கத்துக்கே முரணாக உள்ளது”, என Centre to Combat Corruption and Cronyism (சி4) என்னும் என்ஜிஓ-வின் நிர்வாக இயக்குனர் சிந்தியா கேப்ரியல் கூறினார்.
ஓஎஸ்ஏ பெயரில் அந்த அறிக்கைக்குப் பாதுகாப்பளிப்பது அதைப் பற்றிப் பொதுவில் பேசுவதையும் விவாதிப்பதையும் தடைசெய்கிறது. அதையும் விட முக்கியமாக அது நீதிக்குத் தடைபோடும் செயலாகவும் அமைகிறது என்றாரவர்.
யார் என்ன சொன்னாலும் ஒன்றும் புடுங்க முடியாது. ஆட்சியாளர் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் இவன்கள் கண்ணிருந்தும் குருடர்கள்– பலம் இருப்பவன்கள் தானே எது வேண்டுமானாலும் செய்யலாம்– ரஷ்யா அதிபன் செய்வது சரியா?
சீனா செய்வது சரியா? ஐக்கிய நாட்டு சபையே காகித புலியாக இருக்கும் போது வேறு என்ன சொல்லமுடியும்?