மீண்டும் வன்னியில் விசாரணைகளை நடத்துகின்றது ஜனாதிபதி ஆணைக்குழு!

paranakama_002காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட அமர்வு எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரையில் வன்னிப் பிராந்தியத்தில் இடம்பெறவுள்ளது.

ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்தது.

இதனையடுத்து, மேலும் மூன்று மாத கால பதவி நீடிப்பை ஜனாதிபதி மைத்திரிபால வழங்கியிருந்தார்.

இந்நிலையில், யாழ்.மாவட்டத்தில் கடந்த வாரம் ஆணைக்குழு தனது அமர்வுகளை மீளவும் நடத்தியிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் அமர்வுகளை நடத்தத் தீர்மானித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 25ஆம் திகதியிலிருந்து 30ஆம் திகதி வரையில் இந்த அமர்வுகள் நடைபெறவுள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் நடைபெறும் இந்த அமர்வுகளில், ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளனர் என அறியமுடிகின்றது.

-http://www.tamilwin.com

TAGS: