சமூக வலைத்தளங்களில் மலேசியாகினி மேற்கொண்ட ஒரு கருத்துக்கணிப்பில் குடிமக்கள் பிரகடனத்துக்கும் அதில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரின் பங்களிப்புக்கும் பரவலான ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.
மலேசியாகினியின் முகநூல், டிவிட்டர் பக்கங்களுக்கு வந்து கருத்துத் தெரிவித்த 5,852 பேரில் 76.2 விழுக்காட்டினர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவியிலிருந்து வெளியேறக் கோரிக்கை விடுக்கும் அப்பிரகடனத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
11.6 விழுக்காட்டினர் பிரகடனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிரணி மகாதிருடன் இணைந்து செயலாற்றுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
8.8 விழுக்காட்டினர் பிரகடனத்தில் ஐயுறவு கொண்டிருக்கிறார்கள். இது சரியாக வரும் என்று அவர்கள் நம்பவில்லை.
1.3 விழுக்காட்டினர் பிரகடனம் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று நினைக்கிறார்கள். 2.4 விழுக்காட்டினர் இதைப் பற்றிக் கவலைப்படவே இல்லை.
wat our Hindu sanggam doing regarding intragandi case
MIC ,INDU SANGAM ,எல்லாருமே நஜிப்பின் … பின்னாடி ந… ஊர்வலம் போவார்கள்