புக்கிட் குளுகோர் எம்பி ராம்கர்பால் சிங், எதிரணி முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் சேர்ந்து பணியாற்றவில்லை என்பதைத் தெளிபடுத்தினார். சட்டப்பூர்வ வழியில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவியிலிருந்து வெளீயேற்ற வேண்டும் என்பதில் மட்டுமே எதிரணி மகாதிருடன் ஒன்றுபட்டிருக்கிறது.
“மகாதிருடன் சேர்ந்து பணியாற்றுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. குடிமக்கள் தீர்மானத்தின் நோக்கமே நஜிப் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்பதுதான். அந்தக் கருத்தை எதிரணியும் மகாதிரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்”, என்று ராம்கர்பால் ஓர் அறிக்கையில் கூறினார்.
நஜிப்பின் வெளியேற்றம் ஜனநாயக முறையில், சட்டப்பூர்வமான வழிகளில் நிகழ வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்பதையும் ராம்கர்பால் வலியுறுத்தினார்.
அறிவுள்ள முண்டங்களா! நஜிப் பதவி விலகவேண்டும் என அங்கே அக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் கை எழுத்திட்டது சரி. நஜிப் பதவி இறங்கினால் கர்ப்பால் சிங் மவன் தான் அடுத்த பிரதமர் என்பது உங்கள் கோரிக்கயானால் நீங்கள் கலந்து கொண்டது சரியே. ஆனால், நஜிப்பிற்கு பிறகு வரப்போகிறவரும் அம்னோ காரர்தான் என ஆணித்தரமாக சொல்லியும் உங்களுக்கு அங்கே என்ன வேலை?
நிம்பள் சொல்றன் மக்கள் நம்றான்