தலைவர் உயிருடன் உள்ளார்- சிங்களவர் மத்தியில் பெரும் குழப்ப நிலை தோன்ற ஆரம்பித்துள்ளது

prabhaமுன் நாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கியுள்ளார் ரணில். இதேவேளை போரில் நடந்த பல சம்பவங்களையும் , உள்ளக தகவல்களையும் இன்னும் தன்னுள் அடக்கி வைத்திருப்பவர் , சரத் பொன்சேகா. இவர் வாயை திறந்தால் பல குட்டுகள் வெளியாகும் என்பது பல சிங்கள தலைவர்கள் அறிந்த விடையம். இன் நிலையில் தான் அனைவராலும் பெரிதும் எதிர்பார்கப்பட்ட , சரத் பொன்சேகாவின் கன்னி உரை நடைபெற்றிருந்தது. அவர் பாராளுமன்றில் தெரிவித்த கருத்துக்களை, மகிந்த தரப்பில் உள்ள ஒரு சிங்கிள் ஆள் கூட எதிர்க்கவில்லை என்பது தான் பெரும் ஆச்சரியம். எவரும் அந்த இடத்தில் வைத்து சரத் பொன்சேகாவை சீண்டவில்லை என்பது தான் உண்மை. அப்படி நடந்திருந்தால் அந்த மனுஷன் கோபத்தில் வேறு சில விடையங்களையும் எடுத்து விட்டிருப்பார்.

அவர் தெரிவித்த கருத்தில் மிக முக்கியமான விடையம், தேசிய தலைவர் உயிரோடு இருக்கும்போதே, போர் வெற்றியை அறிவித்துவிட்டார்கள் என்பது தான். இதனூடாக தேசிய தலைவர் இறக்கவில்லை என்றும். மகிந்த அரசு ஒரு சுத்துமாத்து அரசு என்றும் மேலும் ஒரு தடவை சரத் பொன்சேகா கூறியுள்ளார். அதுபோக இந்தச் செய்தியை சிங்கள ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட. தற்போது சிங்களவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதாக்குறைக்கு வட மாகாண உறுப்பினர் ஆனந்தி வேறு புலிகள் தலைவர் 89ல் இறந்தார் என்று வேறு ஒரு கதையைச் சொல்ல. ஒவ்வொரு தடவையும் தலைவர் இறந்ததாக கூறி பின்னர் அவர் மீண்டு வந்துள்ளார் என்ற பேச்சு சிங்களவர் மத்தியில் அடி பட ஆரம்பித்துள்ளது.

சரத் பொன்சேகாவின் இந்த பேச்சால் மகிந்த மற்றும் கோட்டபாயவின் செல்வாக்கில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் தற்போது “கொட்டியா”  (புலிகள்) என்ற வார்த்தை தான் சிங்களவர் மத்தியில் அதிகம் பேசப்படும் பேசுபொருளாக உள்ளது.

-http://www.athirvu.com

TAGS: