சகலதும் பூரணமாக முடிந்தது என்று போர் வெற்றியக் கொண்டாடியவர்களைத் திண்டாட வைக்கும் சரத் பொன்சோகா நாளுக்கு நாள் புதுப்புதுச் செய்திகள் அவிட்டுவிட்ட சாக்கின் நெல்லிக்காயாக உறுண்டு கொண்டிருக்கிறது.
உலகரங்கில் அரங்கேறிய சர்ச்சைகள்தான் அதிகம் அதிசயமில்லை.”யேசுநாதர் இறந்து மூன்றாம்நாள் உயிர்த்தார்.
வேற்று மதத்தவரிடம் இதுபற்றிய நம்பிக்கை இல்லை. உலகத்தை உலுக்கிய சர்வாதிகாரி கிட்லர் எப்படி மடிந்தார் எங்கு போனார் என்பது விபரமின்றி வியப்பானதாகவே இன்றுவரை கிடந்தடிக்கிறது.
ஏன் இந்திய இராணுவத்தின் தளபதி சுபாஷ் சந்திரபோஸ் எப்படி மடிந்தார், எங்கு போனார் இதுபோன்ற சர்ச்சைகள் மத்தியில் புலிகளின் தலைவர் 2009களின் முன்னதாக எத்தனை முறை இறந்தார், உயிர்த்தார் என்பதை எந்த வடிவத்தில் இப்போது வரைவது.
2009 போர்க்களத்து நிலைமைகளை அடுக்கினால் எத்தனை ஆயிரம்பேர் இறந்தார்கள்: உயிர்த்தார்கள் உயிரோடு இருக்கின்றார்களா என்பதும் இன்றுவரை தெரியாது..
சரத்பொன்சேகா வாயிலிருந்து அடுக்கடுக்காக வரும். 2014 மகிந்த பேட்டி அளித்த போது பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக அறிவித்திருந்தார். 2009 பிரபாகரனின் உடலைக்காட்டிய சிங்கள இராணுவம் பொட்டு அம்மான் உடலை ஏன் அப்போது காட்டமுடியவில்லை?
மே 18 அறிவிப்பில் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்தார், பொட்டு அம்மான் உயிரோடு இருந்தார், தமிழர்கள் யாரடா இருவரும் இறந்தாகச் சொன்னார்கள். சரத் பொன்சேகா திரும்பப் பார் பிரபாகரன் சுடப்பட்டிருக்காலம்..பொட்டு அம்மான் இறந்திருக்கலாம்.
என்னடா மாயா யாலம்? நீங்கள்தான் சொல்கின்றீர்கள் உங்கள் மூலம் மேலும் பல திருப்பங்கள் உருவாகி உருவாக்கும் முன்னம் சிறியதாக அகில இந்திய இராணுவத் தளபதி சுபாஷ் சந்திரபோஷ் மனசைத் தட்டி எழுப்பி இப்படிக் கூறும் கவிஞரே என்று கேட்டதால் எழுதுகோல் விரைந்தது.
இந்தியாவிலிருந்து தப்பியோடி ஜெர்மனியிலே அடைக்கலம் புகுந்த மாவீரர். ஜெர்மனி பெலினுக்குச் செல்லும் முன் இத்தாலியில் முசோலினைச் சந்தித்துவிட்டு அடேல் கிட்லரின் நட்பையும் பெற்றவர்.
இந்த நடவடிக்கைகள் நடைபெறுகின்றபோது. யப்பான், சிங்கப்பூர், பர்மா.போன்ற நாடுகளைத் தன்வசம் வைத்திருந்தது.தளபதி சுபாஷ், ஜேர்மன், யப்பான் உதவியோடு நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் மூலம் டோக்கியோவை வந்தடைந்தார்.
இந்தமாதிரியான துணிச்சல் பிரபாகரனிடம் நிறைய இருந்தது.
டோக்கியோவிலிருந்து அந்தமான் தீவுக்குள் வந்தடைந்தார். வெள்ளம்போல் திரண்டிருந்த தமிழ் மக்கள் மகிழ்ச்சியின் போதுதான் சுபாஷ் தளபதியானார். யப்பான் கைப்பற்றியிருந்த தீவுகளை சுபாஷ் வசம் கையளித்தார்கள்.
பிரபாகரன் தமிழ்நாட்டிலிருந்து வந்தார் யாழ்ப்பாணம் முழுமையாகக் கைப்பற்றிய நிலை மகிழ்ச்சி எழுகிறது. மேல் கூறிய நிலை நாடுகளின் உதவி பிரபாகரனுக்குக் கிடைக்கவில்லை. இருந்தும் வடக்கு கிழக்கு முழுமையாக புலிகளின் கட்டுப்பாடிற்குள் வந்துவிட்டது.
சுபாஷ் வந்ததும் தங்கள் விடிவெள்ளியாக அந்தமான் தீவுத் தமிழர்கள் கருதினர். அங்கு வைத்துத்தான் “நேதாஜி” என்ற செல்லப் பெயர் தமிழர்கள்தான் முதல்முதல் சூட்டினார்கள்.
பிரபாகரனைக் கண்டதும் சூரியன் உதித்ததைக் கண்ட தமிழர்கள். தலைவருக்கு சூட்டிய பெயர்கள் அதிகம்.பொட்டு அம்மான் “பொட்டர்” என்றழைத்தார்கள்.
”நேதாஜி” இந்தியா வெல்க வெல்க என்று பெயருடைய “ஜெய்கிந்த்” என்னும் கோஷத்தை முதலில் தமிழர் தாமே எழுப்பினர். உலகெங்கும் எதிரொலித்தது.
மாவீரர் நாள் உரையிலும் தமிழர் விடுதலை வேட்கையிலும் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”பிறந்தது.உலகமே அதிர்ந்தது.
இந்திய தேசிய இராணுவத்தின் அணிவகுப்பில் 16 ஆயிரம் பேர் பங்கெடுத்தனர். பிரபாகரன் அணிவகுப்பில் பெண்கள் ஆண்களாக இதற்குமேல் அணிவகுத்து நின்றனர்.
இன்னுமொரு கோஷத்தையும் எழுப்பினர் “டில்லி சலோ” (டில்லிக்குச் செல்வோம்) இந்தியாவின் உள்ளே நின்றுதான் போர் செய்தவர். இந்திய எல்லையோரத்தில் இ.தே. இராணுவம் கால் வைத்தபோது மக்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் அளவே இல்லை. நேதாஜியக் கட்டித் தழுவிக்கொண்டனர்.
இந்த நிலைக்கும் பிரபாகரன் உயர்ந்தவர். மண்ணை அவர் முத்தமிட்டவர் மக்களை மறைவாகவே இருந்து பூஜித்தவர். தமிழர் காலத்தலைவன் வருகின்ற ஒருநாள் இனத்திற்கே திருநாள்.
இந்திய மக்கள் மண்ணில் விழுந்து புரண்டனர் “ஜெய்கிந்த் ஜே”இந்த கோஷங்கள் எழுப்ப வீரமாய் நின்றவர் பிரமிக்கத்தக்க இராணுவப் போர் செய்த சுபாஷ் சந்திரபோஷ் என்னானார்? பிரபாகரன் எங்குதான் போனார் உண்மைகள் இனி உடனுக்குடன் வரும்.
நேதாஜி சாதனை வீரனைப் போல் தனது சேனைகளுடன் நின்றார் நாள்வேறு அணிகளாகப் பிரிக்கப்பட்ட சேனை “காந்திய அணி”.”நேருஜி அணி.” “நேதாஜி அணி.” “ஆசாத அணி”. இந்த அணிகளைப் படிக்கும்போது புலிகள் நடத்திய அணிகள் உங்கள் நெஞ்சத்தைத் தட்டி எழுப்பும்.
சுபாஷ் இத்தனை அணிகளோடு அஞ்சாமல் கலங்காமல் ஆவேசத்துடன் பகைவன் தாக்குதலைச் சமாளித்து வீரவேசமாகப் போர் புரிந்தவர்.
சாதாரணப் போர் வீரானாக நின்று போர்புரிந்தவர் கல்கத்தாவில் நுழைந்த மாவீரத் தளபதி இந்தியாவின் தேசியக்கொடி ஏற்றி நின்றவர் எங்கே போனார்?
ஆகஸ்ட் 18 திகதி இராணுவத்தின் இணையற்ற தளபதி நேதாஜி யப்பானியப் போர் விமானத்தில் பாங்காக்கிலிருந்து வெளியேறி பின்பு பார்மோஸாவில் உள்ள “தாய்போ” நகரையடைந்தார்.
அங்கிருந்து அவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதால் அந்த விபத்தில் மாண்டு போனார் என்று யப்பான் அறிவித்தது.
இதனை இன்றுவரை யார் நம்பினார்கள்? மறுக்கின்ற செய்திகள் வந்தபடிதான் இருக்கின்றது. அரசியலில் இன்றளவும் இப்படியே செய்திகளைத் தருவார்கள் இப்படியான பலவிதமான ஊகங்கள் பாவங்கள்: எம்மினத்தின் ஈரக்குலை அறுத்த கொலைகாரரிடமிருந்து வெளிவருகின்றது.
சந்திரிகா அம்மையார் போட்ட குண்டில் கிரோசிமா தெரிகிறது. போரில் கணவனை இழந்த தமிழ்ப்பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ள குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
படையினர் மட்டுமல்ல தமிழ் அதிகாரிகளும் விதவைப் பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோருவதாக முன்னால் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளது அப்பட்டமான பொய்.
அந்தளவுக்குத் தமிழனாகப் பிறந்தவன் உணர்வற்ற பேய்களா? இல்லை இவன் பிரபாகரன் நடத்தலின் கீழ் இல்லாதவனாக இருந்திருக்கலாமா? சிங்கள இராணுவத்தைப் போலல்ல இது பொய்.
சந்திரிகா எத்தனை வருடங்களுக்குப் பிற்பாடு பொய்யை வெளியிடுகிறா என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்த ஆண்டு தூரதிஸ்ட ஆண்டாக இருக்கப் போவது சரத் பொன்சோகாவின் வயிலிருந்து வருவதும் எதிரிகளிடமிருந்து வரும் உண்மைகளும் வெளிப்படுத்தும். பொட்டு அம்மான் உயிரோடு இருந்தால் தலைவரும் உயிரோடு இருப்பார். தமிழர்களுக்கு தெளிவாக விளங்கும் கனி எது — நஞ்சு கலந்த கனி எதுவென்று.
2016.மே.16 தமிழகத் தேர்தலில் மேடைப் பேச்சுக்கள் பேட்டிகள் செய்திகள் வெளிப்படும். அசிங்கங்கள் எங்களது உயரிய விடுதலைப் புலிகள் மீதான வதைப்பாடுகளாக. வீரமிக்கதான எடுத்துக் காட்டுகளாகப் பொழியப் போகின்றதா.?
புலிகளின் தலைவர் மீதும் இயக்கத்தின் மீதுமான பிரசாரங்கள் அர்த்தமற்ற உதாரணங்களும் உருப்படாத உறுட்டு மிரட்டலுகளும் உருவாகப் போகிறதா.? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன்
[email protected]
-http://www.tamilwin.com