இறுதிப் போரில் பயன்படுத்தப்பட்ட கவச வாகனங்களில், இறுதியாக சுமார் 30 மட்டுமே மிஞ்சியுள்ளது என்று கூறியுள்ளார் சரத் பொன்சேகா. முகமாலையில் புலிகளுக்கு எதிராக தாம் யுத்தம் ஆரம்பித்தவேளை தம்மிடம் 80 கவச வாகனங்கள் இருந்ததாகவும். முகமாலையில் நடந்த ஒரு நாள் சமரில் மட்டும் சுமார் 150 ராணுவ சிப்பாய்களை தாம் இழந்ததாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சில இடங்களில் இடம்பெற்ற பின்னடைவுகளுக்கான பொறுப்பை தாம் ஏற்க்க தயாரா உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதுபோக தாக்குதலுக்காக தம்மிடம் இருந்த சுமார் 80 கவச வாகனங்களில், 30 மட்டுமே மிஞ்சியதாகவும். 50 கவச வாகங்களை புலிகள் அழித்து விட்டதாகவும் வெளிப்படையாகவே சரத் பொன்சேகா கூறியுள்ளார். இறுதி தாக்குதலுக்கு என்று பயன்படுத்த வைத்திருந்த சில கவச வாகங்கள் கூட இறுதி நேரத்தில் தகர்க்கப்பட்டது என்ற விடையத்தையும் சரத் பொன்சேகா போட்டு உடைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
-http://www.athirvu.com


























