இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்படவில்லை என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ரணில் இதனைக் குறிப்பிட்டார்.
ஏற்கனவே பல தடவைகள் நாடாளுமன்றத்தில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய பெருந்தெருக்கள் அமைச்சர் நிட்டின் கட்காரி லோக்சபாவில் இந்த விடயத்தை ஹிந்தியில் கூறியிருக்கலாம்.
எனினும் தம்முடன் இந்திய பிரதமரோ அரசாங்கமோ இது தொடர்பில் எந்த பேச்சுவார்த்தையையும் மேற்கொள்ளவில்லை என்று ரணில் குறிப்பிட்டார்.
-http://www.tamilcnnlk.com

























