பிரசல்ஸ் நகர விமான நிலையத்தை தாக்குவதற்கு பதிலாக அங்குள்ள அணு உலைகளை தகர்த்து பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டம் தீட்டியதாக தற்போது பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரசல்ஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாரீஸ் தாக்குதலின் முக்கிய தீவிரவாதியான சலா அப்தெஸ்லாம் என்பவரை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.
பொலிசாரின் இந்த கைது நடவடிக்கை ஐ.எஸ் தீவிரவாதிகளை ஆத்திரத்தில் ஆழ்த்தியதால், பெல்ஜியத்தில் உள்ள அணு உலைகளை தகர்த்து பெரும் உயிரிழப்பை ஏற்படுத்த Khalid மற்றும் Ibrahim El Bakraoui என்ற இரு தீவிரவாதிகள் பிரசல்ஸ் நகரில் நுழைந்துள்ளனர்.
விமான நிலையத்தில் தாக்குதலை நடத்தி விட்டு, அதே சமயத்தில் அணு உலைகளையும் தகர்க்க திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், இரட்டை சகோதரர்களின் கூட்டாளி ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதால், அணு உலைகளை தாக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டு ரயில் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பெல்ஜியத்தில் வெளியாகும் Dernier Heure என்ற பத்திரிகை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல், அணு உலைகளை தாக்குவதற்கு சரியான சந்தர்ப்பத்தை உருவாக்கி கொள்ள பெல்ஜியம் அணு உலைகள் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வீட்டிற்கு முன்பாக தீவிரவாதிகள் ரகசிய கமெராவை பதிவு செய்துள்ளனர்.
இதன் மூலம், இயக்குனரின் நடவடிக்கைகளை தீவிரவாதிகள் கூர்ந்து கண்காணித்து வந்ததாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தீவிரவாதிகளின் கூட்டாளி கைது செய்யப்படாமல் அவர்கள் அணு உலைகளை தகர்த்திருந்தால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்ட நாட்டையே உலுக்கியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், துரிதமாக செயல்பட்ட பொலிசார் கூட்டாளியை கைது செய்ததால், பெரும் ஆபத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
-http://world.lankasri.com