கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை

Sri-Lankaதமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வு திட்ட முன் வரைபு தொடர்பில், கொழும்பு வாழ் தமிழ் மக்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

வட கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிளும் மக்கள் கருத்து பதியப்பட்டு வருகின்ற இதேவேளை, ஈழ தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் கொழும்பு வாழ் மக்களின் வகிப்பங்கு மிகவும் அவசியமானது.

தமிழ் மக்கள் பேரவை தயாரித்துள்ள முன்வரைபு தொடர்பில் கொழும்பு வாழ் தமிழ் மக்களின் கருத்தறியும் சந்திப்பு எதிர்வரும் சனிக்கிழமை (26) மாலை 4:30 மணியளவில் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள தமிழ் சங்கம் மண்டபத்தில் நடைபெறும்.

எனவே, இந்த கருத்தறியும் நிகழ்வில் தமிழ் மக்கள் அனைவரும் வருகைதந்து தமது கருத்துக்களை பகிரும்படி தமிழ் மக்கள் பேரவையினர் கேட்டு கொண்டுள்ளனர்.

இதேவேளை, மிக விரைவில் தீர்வுத்திட்ட முன்மொழிவினை முழுமையாக தயாரிக்கின்ற பணி ஆரம்பிக்கப்படவுள்ளதால் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக தமிழ் மக்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளுகின்றனர்.

மக்கள் தங்களின் கருத்துக்களையும், அபிப்பிரயங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 94 75 6993211 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அனுப்பி வைக்கும் படி பேரவையின் ஏற்பாட்டு குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-http://www.tamilcnnlk.com

TAGS: