2014-இல் அம்னோ மகளிர் தலைவர் ஒருவர் சீனர்கள் குர் ஆனைத் தீயிட்டு கொளுத்தினர் என்று கூறியதை ஒரு குற்றமாகக் கருத ஆதாரங்கள் ஏதுமில்லை என்று சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் முடிவுக்கு வந்ததாக சட்ட அமைச்சர் நன்சி ஷிக்ரி கூறினார்.
“விசாரணை அறிக்கையை ஏஜி அலுவலகம் நன்கு ஆராய்ந்து பார்த்தது. மஷிடா இப்ராகிம் குற்றம் புரிந்தார் என்பதற்கு ஆதாரங்கள் எதையும் அதனால் காண முடியவில்லை”, என்றாரவர்.
மஷிடாவுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வினவிய கூய் ஹிசியாவ் லியோங்(பிகேஆர்- அலோர் ஸ்டார்)குக்கு எழுத்துவழி வழங்கிய பதிலில் நன்சி இதைத் தெரிவித்தார்.
செனட்டரும் முன்னாள் துணை அமைச்சருமான மஷிடா 2014 அம்னோ பொதுப் பேரவையில் உரையாற்றியபோது கெடாவில் சீனர்கள் குர் ஆனைப் பக்கம் பக்கமாக தீயிட்டு எரித்ததார்கள் என்று கூறினார்.
அம்னோக்காரர்கள் எது வேண்டுமென்றாலும் பேசலாம்.ஆதாரமில்லயென்று விடுவிக்கப்படலாம்.இதெல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான்.இது தெரிந்துதான் இந்த நாய்கள் பிற இனத்தையும் மதங்களையும் கேவலமாக பேசுகின்றனர்.
குற்றம் புரிந்தார் என்று நாமும் சொல்லவில்லை! அம்னோ பேரவையில் அதனைக் கூறினாரா இல்லையா? என்பதையாவது உங்களால் சொல்ல முடியுமா?
அம்நோகாரன் அம்னோ காரி எந்த காலத்தில் தவறு புரிந்து இருக்கிறார்கள்? இவ்வளவு அநியாயம் பண்ணியும் இன்னும் பிரதமனாக இருக்கும் ஈன ஜென்மம் இருக்கும் நாடு —