“எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழீழத்தை உருவாக்கும் வகையிலான பிரச்சார பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபடவேண்டும்” என நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் வீ.உருத்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ மக்களின் கரங்களை பலப்படுத்தும் சக்திகளை தமிழக மக்கள் பலப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் எனவும், அதற்கு தேர்தல் களத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பலம் பொருந்திய நாடுகள் தமது சுய இலாபங்களுக்காக இலங்கை அரசை ஆதரித்து வருவதாகவும் அவர்கள் சிங்கள அரசுடன் நல்லுறவைப் பேணி தமது சுய இலாபத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முயற்சி செய்து வருவதாகவும் உருத்திரகுமாரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் பல சவால்களை சந்தித்து வரும் நிலையில் தமிழ் மக்கள் மீது எந்தவித கரிசனையையும் காட்டாத அணுகு முறையை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஏற்படுத்துவதற்கே இலங்கை அரசு முயற்சித்து வருவதாகவும், இதனால் தமிழர்களின் தாயகத்தை வென்றெடுக்க முடியாமல் போகும் நிலை ஏற்படும் எனவும் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் வீ.உருத்திரகுமாரன் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com
கடைசியா இருந்த சீமானும் தமிழக அரசியலுக்கு போயாச்சு ….
நமக்கு தேவை அரசியல் தீர்வு,அதைதான் சீமான் கையிலேடுதிருக்கிறார்.
என்னய்யா ஞாயம். உமது இலங்கை பிரச்சனையால் தமிழ் நாடு பட்ட கஷ்டங்கள் போதும். அங்குள்ள இலங்கை வாழ் மக்களே நல்ல தொரு அரசியல் தீர்வை கண்டு அவர்கள் வாழ்வும் வளமும் அடைய வேண்டுகிறேன். இந்த இலங்கை பிரச்சனையை வைத்து தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் தமிழ் நாட்டை முட்டாளாக்கியது போதுமே. இனி இந்திய வாழ் தமிழர்கள் வாழ்வு சிறப்பு அடைய விடுங்கள்.