வடமாகாணத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் சிவில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மஹிந்த ஆட்சிக்கு ஒப்பான கோரமான இராணுவ ஆட்சியே நடைபெற்று வருகின்றது.
தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கில் சிங்கள பெளத்த மயமாக்கலுக்கே முப்படையினரும் இங்கே தங்கவைக்கப் பட்டிருக்கின்றார்கள் தவிர தேசிய பாதுகாப்புக்கு இங்கே படையினர் இல்லை.என வடமாகாணசபையின் 49ம் அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 18ம் திகதி ஐனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வடமாகாண சபையின் 49ம் அமர்வு இன்றைய தினம் காலை 9 மணிக்கு தொடங்கிய நிலையில் கடந்த 10ம் திகதி முல்லைத்தீவு – கொக்குத் தொ டுவாய் வடக்கு பகுதியில் சட்டத்திற்குமாறாக வந்து தங்கிய சிங்கள மீனவர்களினால் கிராமசேவகர் தாக்கப்பட்டமைக் கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து இடம் பெற்ற விவாத்திலேயே மேற்படிவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொட ர்பாக மேலும் சபையில் பேசப்படுகையில் மேற்படி கிராமசேவகர் தாக்கப்பட்ட சம்பவ த்தில் இராணுவம் சிங்கள மீனவர்களுக் கு ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் வடமாகாணத் தில் தேசிய பாதுகாப்பின் பெயரினால் மு ப்படையினர் நிறுத்திவைக்கப்படுகின்றா ர்கள்.
ஆனால் தேசிய பாதுகாப்பிற்காக அவர்கள் இங்கே இல்லை.அவர்கள் சிங்கள பெளத்த மயமாக்கலை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள வே படையினர் இங்கே இருக்கின்றார்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மஹிந்த ஆட் சியில் கடற்றொழில் அமைச்சராகஇருந்த றாஜித சேனாரத்ன மற்றும் தற்போதைய கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் குறித்த சிங் கள மீனவர்களை வெளியேற்றுவோம் என கூறியும் அவர்கள் வெளியேற்றப்படவில்லை.
அவர்களுக்கு படையின ர் பாதுகாப்பு வழங்குகிறார்கள் என்றால் இங்கே நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி யிலும் சிவில் நிர்வாகம் நடைமுறைக்கு வரவில்லை. மாறாக மஹிந்தஆட்சிக்கு ஒப்பான கோரமான ஆட்சியே நடக்கிறது என மாகாணசபை உறுப்பினர் கள் சுட்டிக்காட்டியதுடன் இலங்கையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செய்யப்ப ட்டு தீர்வு தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும் வரையில் படையினரு க்கான காணிகள் எடுப்பு மற்றும் சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டும் என உறுப்பினர்கள் கேட்டதுடன், முதல மைச்சர் இது விடயமாகஐனாதிபதி, பிரதமருடன் பேச வேண்டும் எனவும் கோரினார்கள் இந்நிலையில் எ திர்வரும் 18 ம் திகதி ஐனாதிபதி, பிரதமருடன் பேசப்படும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறி யுள்ளார்.
-http://www.tamilwin.com