சி.வி.விக்னேஸ்வரன் வாய்ச்சொல் வீரர்; செயல்வீரர் அல்ல: டி.எம்.சுவாமிநாதன்

suwaminathan-100x80வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒரு வாய்ச்சொல் வீரர். அவர் செயல்வீரர் இல்லை என்று இந்து கலாச்சார, புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களின் நலன்கள் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரின் நிலைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் அமைக்கப்படவுள்ள 65,000 வீடுகள் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் மத்திய அரசாங்கத்துக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பில் பதிலளிக்கும் போதே அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

வடக்கு மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு இந்த வீடமைப்பு திட்டம் உருவாக்கப்படவில்லை. மாறாக, ஜெனீவாவை (ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை) திருப்திப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சி.வி.விக்னேஸ்வரன் தன்னுடைய கடிதத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள டி.எம். சுவாமிநாதன், “யுத்தத்தின் பின்னர் வடக்கு மாகாணம் மக்களின் நலனுக்காக எதனையும் செய்யாது, அரசாங்கத்தை விமர்சனம் செய்வதில் காலத்தை செலவிட்டு வருகின்றது. வடக்கு தமிழ் மக்களின் சமூக, பொருளாதார மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கங்கள் முன்னெடுக்கும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் வடக்கு மாகாணசபை நிராகரித்து வருகின்றது. இது வடக்கு மக்களை பாரதூரமான வகையில் பாதிக்கும். அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நோக்கங்கள் மற்றும் அரசியல் நோக்கங்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: