மைத்திரி அரசாங்கம் ஒன்றையும் செய்யவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளமாட்டேன்: சம்பந்தன்

sambanthar_tnaஇலங்கையில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சியின் கீழ் ஒன்றுமே நடக்கவில்லை என கூறினால் அதனை நான் ஒத்துக் கொள்ளமாட்டேன். சில விடயங்கள் நடைபெற்றிருக்கின்றன.

இதே இடத்தில் மஹிந்த ராஜபக்ஷ இருந்திருந்தால் தமிழர்களுடைய நிலை மிகவும் மோசமனதாக மாறியிருக்கும். என்பதே உண்மையாகும்.

இன்றைக்கு மஹிந்த தரப்பு தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டு சிங்கள மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்க நினைக்கிறார்கள்.

எனவே எல்லாவற்றையும் சற்றே நிதானமாக செய்யவேண்டிய அவசியம் நிச்சயமாக உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்திருக்கின்றார்.

வடமாகாணத்திற்கு 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு யாழ்.நல்லூர் பகுதியில் உள்ள தமிழ்த் தேசிய கூட் டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

குறித்த சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இராணுவம் தமிழ் மக்களுடைய காணிகளை விடுவிக்க வேண்டும். அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் படையினரும் பயன்படுத்தாமல், மக்களும் பயன்படுத்தாமல் பெருமளவு நிலம் இருக்கின்றமை தொடர்பாக நாங்கள் அறிவோம்.

மக்களுடைய நிலங்களை மக்களிடம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் மைத்திரி அரசாங்கம் ஒன்றையுமே செய்யவில்லை என்பதை நான் ஒத்துக் கொள்ளமாட்டேன்.

இதே இடத்தில் மஹிந்த ராஜபக்ஷ இருந்திருந்தால் இன்றைக்கு நாங்கள் பிரச்சினைகள் என சொல்லும் விடயங்களின் நிலமை 100 மடங்கு அதிகமாக இரு ந்திருக்கும் என்றார்.

தினேஸ் குணவர்தனவின் கருத்து தொடர்பாக…

கேள்வி:- எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு தனியே வடகிழக்கு தமிழ் மக்கள் சார்பாக மட்டும் இரா.சம்மன்தன் பேசுவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் தலைவர் தினேஸ் குணவர்தன கூறியுள்ளாரே?

பதில்:- தினேஸ் குணவர்தன தன்னை ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் தலைவராக உருவகித்துக் கொள்ளுகின்றார். அவருடைய கருத்துக்கு பதில் சொல் லவேண்டிய தேவை அல்லது அவசியம் எனக் கு கிடையாது.

வடகிழக்கு மாகாணங்கள் இந்த நாட்டின் பாகங்கள். நான் அவற்றை பற்றியே பேசுகிறேன் என்றால் இந்த நாட்டை பற்றியே பேசுகிறேன்.

தினேஸ் குணவர்தன வடகிழக்கு மாகாணங்களை பற்றி பேசுகிறரா? இல்லையே அவர் தன்னுடைய ஊரை பற்றித்தானே பேசுகிறார்.

எனவே தினேஸ் குணவர்தன எங்களை பற்றிப் பே ச முடியாது. எங்களை பற்றி பேசுவதற்கு அவருக்கு அருகதையும் கிடையாது.

முன்னாள் போராளிகள் தொடர்பாக…

கேள்வி:- முன்னாள் போராளிகள் சிலர் நல்லாட்சி அரசாங்கத்திலும் கைது செய்யப்படுகின்றார்கள். அச்சுறுத்தப்படுகின்றார்களே? இதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

பதில்:- அது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம். என்ன நடக்கிறது? என்பதை பரிசீலிப்போம்.

மீள்குடியேற்ற அமைச்சின் பொருத்து வீடுகள் தொடர்பாக…

கேள்வி:- மீள்குடியேற்ற அமைச்சின் பொருத்து வீடுகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது?

பதில்:- குறித்த வீட்டுத்திட்டம் தொடர்பாக நாங்கள் எங்கள் ஆட்சேபனைகளை தெரிவித்திருக்கின்றோம். எங்களுடைய கலாச்சாரம், வாழ்வியலுக்கு பொருத்து வீடுகள் பொருத்தமாக இருக்காது. மேலும் எங்களுடைய பாரம்பரிய படி கொங்கிறீட் வீடுகளையே எதிர்பார்க்கின்றோம்.

நாங்கள் எதிர்பார்க்கும் 2 வீடுகளை அமைப்பதற்கான செலவிலே இந்த ஒரு பொருத்து வீடு அமைக்கப்படுகின்றது. மேலும் இவ்வாறான வீடுகள் நாட்டில் எங்கும் அமைக்கப்படவில்லை.

இங்கே அமைக்க முயற்சிக்கப்படுகின்றது. இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் குறித்த வீடுகள் அமைக்கும் பணியை ஜனாதிபதி நிறுத்தியுள்ளதாக அறிகிறோம்.

எனவே இது தொடர்பாக பரிசீலித்து முடிவுகளை எடுப்போம்.

2016ம் ஆண்டில் அரசியல் தீர்வு தொடர்பாக….

கேள்வி:- 2016ம் ஆண்டில் ஒரு அரசியல் தீர்வு எட்டப்படும் என கூறியிருந்தீர்கள் அதற்கான முயற்சிகள் எந்தக்கட்டத்தில் இருக்கின்றன?

பதில்:- தீர்வை கொடுப்பவன் நான் அல்ல. 2016ம் ஆண்டில் தீர்வு கிட்டும். என நான் கூறியது என்னுடைய கணிப்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என நினைக்கிறார்கள்.

தீர்வை விரும்புகிறார்கள் என்பதும் என்னுடைய கணிப்பு. அவர்களுக்கு தனியே மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிடினும் எங்களுடைய ஒத்துழைப்புடன் அதனை பெற்றுக் கொள் ள முடியும்.

எனவே இந்த விடயத்தில் எல்லோரும் விசுவாசமாக நடந்து கொண்டால் என்னுடைய கணிப்பீட்டின் படி தீர்வினை பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு நடப்பது நல்லது.

இந்த விடயத்தில் ஊடகங்கள் குழப்பாமல் நடந்து கொள்ள வேண்டும். தீர்வு விடயத்தில் நாங்கள் தீவிரமான ஈடுபாட்டை காட்டி வருகின்றோம்.

தமிழ் மக்கள் சமூக, பொருளாதார, கலாசார விடயங்களை பாதுகாத்து வாழ கூடிய நியாயமானதும் நிரந்தரமானதுமான ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்.

மேலும் நாங்கள் மக்கள் மீது தீர்வை திணிக்கப் போவதுமில்லை. இறுதி தீர்வு எட்டப்பட்டவுடன் மக்களிடம் வந்து அவர்களுடைய கருத்துக்க ளை அறிந்து கொண்டே அதற்கு உடன்பாட்டை தெரிவிப்போம்.

ஜெனீவா தீர்மானம் தொடர்பாக….

கேள்வி:- ஜெனீவா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை தொடர்பாக உங்கள் அவதானம் என்ன?

பதில்:- உண்மைகள் கண்டறியப்படவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது பார்த்துக் கொள்ளவேண்டும். இவற்றை பெற்றுக் கொள்வதற்கான வழி நிரந்தரமான அரசியல் தீர்வு மட்டுமே யூன் 13ம் திகதி தொடக்க ம் ஐ.நா 32ம் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

இதில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஒரு வாய்மொழி மூல அறிக்கையினை வழங்கவுள்ளார். அதற்காக 2015ம் ஆண்டு ஐப்பசி மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படு த்தப்படுகின்றதா? என்பதை அரசாங்கம் கூறவேண்டும் என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: