இறுதிப் போர் தொடர்பில் எந்தவொரு விசாரணைப் பொறிமுறையும் தேவையில்லை என்று 44.2 சதவீதமானவர்களும், விசாரணைப் பொறிமுறை தேவை என்று 42.2 சதவீதமானவர்களும் தெரிவித்துள்ளனர் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.
போருக்குப் பின்னரான காலப் பகுதியில் ஜனநாயகம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ளது.
இதில், இறுதிப் போரின்போது நடந்தவற்றை விசாரிப்பதற்கான பொறிமுறை எதுவும் அவசியம் இல்லை என்று ஆய்வில் பங்கேற்றவர்களில் 44.2 சதவீதமானவர்கள் கூறியுள்ளனர். விசாரணை பொறிமுறை அவசியம் என்ற நிலைப்பாட்டை 42.2 சதவீதமானோர் வெளிப்படுத்தியுள்ளனர்.
விசாரணைப் பொறிமுறை வேண்டும் எனக் கூறுபவர்களில் 47.3 வீதமானோர் அந்த விசாரணை வெளிநாட்டுத் தலையீடு இல்லாமல் முழுக்க உள்நாட்டு பொறிமுறையின் கீழ் நடத்தப்படவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 9 வீதமானவர்களே முழுக்கச் சர்வதேச தலையீட்டுடனான விசாரணை தேவை என்று வலியுறுத்துகின்றனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு மீதான நம்பிக்கை
அத்துடன், ஊழலை ஒழிப்பதில் அரசின் முன்னெடுப்புகள் மீது மக்கள் குறைவான நம்பிக்கையையே வைத்துள்ளனர். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட 41 வீதமானோர் அரசு மீது நம்பிக்கை வைக்கவில்லை. எனினும், 34 வீதமானோர் அரசு ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக நம்புகின்றனர்.
வாழ்க்கைச் செலவை அரசு கையாளும் முறைமையில் 51.2 வீதமானவர்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். அதேவேளை, 30 வீதமானோர் அரசின் செயற்பாடுகளில் திருப்தி வெளியிட்டுள்ளனர்.
தமிழ் – சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று 49 வீதமானோர் விரும்பும் அதேவேளை, 41 வீதமானோர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு நாட்டின் 25 மாவட்டங்களில் உள்ள 4 பிரதான சமூகத்தவர்கள் மத்தியிலும் ஆங்காங்கே நடத்தப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 102 பேர் இதில் பங்கேற்றுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் ஆய்வை இலகுவாக மேற்கொள்ள முடியாமல் போன சில இடங்கள் தவிர்ந்த, ஏனைய பகுதிகள் உட்பட நாடெங்கிலும் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 3ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
-http://www.tamilwin.com
ஆமாம், உண்மை வெளிவரும் என்ற பயம் உமக்கு.நீ செய்த படுகொலையை யாரும் மறக்க மறக்க முடித்து .இந்தியா செய்த துரோகமும் மன்னிக்க முடியாது.உங்களுக்கு பாடம் கொடுக்க அண்ணன் சீமான் வந்துக்கொண்டிருகிறார்.
இனவாதத்தின் மறைமுகமே ,நடுநிலைமை எங்கே , மனிதநேயம் எங்கே , அனைத்தும் மறுக்கப்பட்டனவே ,மறைக்கப்பட்டனவே , விதைக்கப்பட்ட உண்மைகள் என்றும் உறங்குவதில்லை , தழைக்கும் என்று நம்புவோமாக .[ மலரட்டும் தமிழ்ஈழம் ].
இது புதியது அல்ல 60 வருடங்கள் இதுதான் ….ஆக மீண்டும் முளைக்க வேண்டும் ….