இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை: ஜெயலலிதா

Jayalalitha addresses the mediaஇலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவாம் என ஜெயலலிதா பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

திருச்சியில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த 67 வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்துள்ளார்.

அப்போது பேசிய அவர், தமிழக அரசியலில் மாற்றம் தந்த உங்கள் வாழ்வில் ஏற்றம் தந்த இந்த அரசுதான் எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு. நான் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி தந்திருக்கிறேன்.

இதுதவிர சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளேன்.மோசடியில் ஈடுபடும் தி.மு.க.வை தேர்தல் ஆணையம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க.வினருக்கு இப்போது தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது.

எனது ஆட்சியில் இலங்கைத் தமிழர்களுக்கு அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்படுகின்றன. அகதிகளை திருப்பி அனுப்புவதற்கு எனது அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இலங்கையில் நிலைமை முழுமையாக சீரடைந்த பிறகே இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்படவேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவாம்.

இலங்கை பிரச்சனையில் தி.மு.க. நாடகம் ஆடியது. தமிழர் படுகொலைகளை தடுக்கவில்லை.

இலங்கை அரசுக்கு மத்திய அரசு ராணுவ உதவி வழங்கியதை தி.மு.க. தடுக்கவில்லை என பேசியுள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: