பாஸ் சரவாக்கில் 11 இடங்களில் பக்கத்தான் ஹராபானை எதிர்த்துப் போட்டியிடுகிறது

salaஎதிர்வரும்  சரவாக்  மாநிலத் தேர்தலில்  இஸ்லாமிய  கட்சியான  பாஸ்,  குறைந்தது  11  இடங்களில்  அதன்  முன்னாள்  பக்கத்தான்  ரக்யாட்  பங்காளிக்  கட்சிகளான  பிகேஆரையும்  டிஏபியையும்  தன்னிலிருந்து  பிரிந்து  சென்ற   பார்டி  அமானா  நெகாராவையும்  எதிர்த்துக்  களமிறங்குகிறது.

பாஸ்  ஐந்து  இடங்களில்  அமனாவை  எதிர்த்துப்  போட்டியிடுவதாக  போர்னியோ  போஸ்ட்  தெரிவித்தது.

அமனா  துணைத்  தலைவர்  சாலாஹுடின்  ஆயுப்  கடந்த  வெள்ளிக்கிழமை  அக்கட்சியின்  வேட்பாளர்  பட்டியலை  வெளியிட்டிருந்தார். இரு  கிறிஸ்துவர்கள்,  இரு  பெண்கள்  உள்பட  13  பேர்  அப்பட்டியலில்  இடம்பெற்றிருந்தனர்.