வேட்டையாடப்படும் முன்னாள் புலிகளின் தளபதிகள்! அதன் பின்னணி என்ன?

Logo-LTTEஅம்பாறை மாவட்டத்தில்

கடந்த 24ம் திகதி அம்பாறை மாவட்டம் திருக்கோவில் – தம்பிலுவில் பகுதியிலுள்ள புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம் அவரது வீட்டிலிருந்த போது இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினரான ராம், 1990 ஆம் அண்டு ஜூலை மாதம் புலிகளிடம் சரணடைந்த 600 பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் .பயங்கரவாத விசாரணைப்பிரிவின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ராமிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலமாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.

1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொத்துவில்.அக்கரைப்பற்று,.சம்மாந்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களை முற்றுகையிட்டட புலிகள் சகல சிங்கள முஸ்லிம் பொலிஸார்களையும் ஆயுதங்களையும் அள்ளிச் சென்றார்கள். அதன் பின்பு திருக்கோவிலுக்கு அடுத்த ஊரான விநாயகபுரத்தில் காட்டுப் பகுதியில் சகல பொலிசாரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லப்படுகின்றது.

ஆனையிறவு மற்றும் பூநகரி இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தலைமை வகித்த ராம், யால தேசிய சரணாலயத்தில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடனும் தொடர்புபட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

கடந்த 24ம் திகதி திருக்கோவில் – தம்பிலுவில் பகுதியிலுள்ள அவரது வீட்டிலிருந்த இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து, கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட ராம், பயங்கரவாத விசாரணைப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

முன்னதாக, புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண தளபதியாக செயற்பட்ட கருணா அம்மான் புலிகள் அமைப்பிலிருந்து விலகியதையடுத்து, ராம் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு ஆயுதப் பிரிவுக்குப் பொறுப்பாக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனால் நியமிக்கப்பட்டதகவும் சொல்லப்படுகின்றது .

கடந்த 2009ம் ஆண்டு இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட அவர், 2013ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்டனி படைப் பிரிவின் சிறப்பு தளபதியான நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்பவர் நேற்றுக்காலை காலை நீர்வேலி தெற்கு பகுதியில் உள்ள அவருடைய வீட்டிலிருந்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் காணாமல் போயிருந்த சில தளபதிகளில் இவரும் ஒருவர் என கூறப்பட்டிருந்த நிலையில், நீர்வேலி பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் திருமணம் முடித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றுக்காலை சிவில் உடையில் நீர்வேலியிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் நகுலன் என்ற முன்னாள் விடுதலைப் புலிகளின் தளபதியை கைது செய்துள்ளனர்.

திருகோணமலையில்

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் திருமலை புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் கலையரசன் நேற்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட தற்கொலைத் தாக்குதல் அங்கி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாம் .

தற்போது கைது செய்யப்பட்டுள்ள கலையரசன் என்பவர் ராமின் நெருங்கிய சகா என்றும் இருவரும் இணைந்து பல தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள கலையரசன் எனும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் வன்னி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடையவோ, புனர்வாழ்வுக்கு உட்படவோ இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தனது மனைவி பிள்ளைகளுடன் திருகோணமலையில் வசித்துக் கொண்டிருந்த அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி தற்கொலைத் தாக்குதல் அங்கி தொடர்பாக இதுவரை விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தக் கைதுகள் தொடரும் என்றும் வேட்டையாடல்கள் தொடரும் என்றும் ஒரு தகவல் தெரிவிகின்றது.

இதன் பின்னணி என்ன ?

பல வகையான நோக்கத்தின் அடிப்படையில் வடகிழக்கில் பயங்கரவாதம் தலை தூக்குவதாக ஒரு மாயை உருவாக்கி படையினரை ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தவும் .மக்களை ஒரு அச்ச நிலையில் வைத்திருக்கவும் அந்நிய நாடு ஒன்றின் உளவுத்துறை இலங்கை பாதுகாப்புத் தரப்புக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாம்..இதன் பின்னணியில் தமிழ் மகளுக்கு விரோதமான சில தமிழ் தரப்பும் உள்ளதாம் .அவர்களின் தகவல்களின் அடிப்படையில்தான் இந்தக் கைது தொடர்வதாக ஒரு தகவல்.

எம்;.எம்;. நிலாம்டீன்

-http://www.tamilwin.com

TAGS: