தமிழகத்திலுள்ள இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அறிவித்தமையானது தேர்தல் பிரசார நடவடிக்கை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடிய சந்தர்ப்பத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்குகளைப் பெறும் நோக்கிலேயே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
-http://www.tamilwin.com

























