தமிழர் தாயகப் பகுதிகளுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வடக்கு முதல்வர் சீ.வி. விக்னேஸ்வரன் முன்வைத்த கோரிக்கையை சுவீடன் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கோட் வெல்ஸ்டோன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் அண்மையில் சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.
இதன்போது தமிழர் தாயகப் பகுதிகளுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விக்னேஸ்வரன் முன்வைத்த யோசனைகளை சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கோட் ஏற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் நேரடி நிதியுதவிக் கோரிக்கையை சுவீடன் வெளிவிவகார அமைச்சர் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.