1எம்டிபி வாரியத்தின் இயக்குனர்களின் பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்ட்டதை நிதி அமைச்சு இன்கோர்பொரேடெட் உறுதிப்படுத்தியது.
வாரிய உறுப்பினர்களின் பதவி விலகள் மே மாத 31 இல் அமலுக்கு வரும் என்று 1எம்டிபியின் ஒட்டுமொத்த பங்குகளின் உரிமையாளர் என்ற முறையில் நிதி அமைச்சு இன்கோர்பொரேடெட் அறிவித்தது.
1எம்டிபியின் இன்றைய வாணிக நிலையை பிரதிநிதிக்கும் வகையில் புதிய இயக்குனர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று நிதி அமைச்சு இன்கோர்பொரேடெட் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
1எம்டிபியின் தலைவர் அருள் கந்தா கந்தசாமி அடுத்த அறிவிப்பு வரும் வரையில் அவரது பதவியில் தொடர்ந்து இருப்பார் என்றும் அந்த அறிக்கை கூறிற்று.
கை கழுவிட்டர்கள். இனி யாரையும் கேள்வி கேட்க முடியாது. சட்டமும் அதன் வேலையைச் செய்யாது. இவர்களுக்கெல்லாம் பின் இருந்து வேலை செய்தவர் இனி பதில் சொல்லத் தேவை இல்லை. இதுதான் இந்நாட்டு நடப்பு என்றால் இந்நாட்டு மக்களும் கையாலாகதவர்தாம்.
பெரும் திறமைசாலிகள். ஊழல்வாதிகளும் கையால் ஆகாத பெருச்சாலிகள்- பேச்சுக்கு மட்டும் அளவில்லை– இவன்களின் கையால் ஆகாத தனத்தை எத்தனை பேர்கள் வெளிநாடுகளில் எள்ளி நகையாடுகிரார்களோ?