இலங்கையில் ஆயுத மோதல்கள் நீடித்த காலப்பகுதியோடு ஒப்பிடும் போது சித்திரவதைகள் குறைந்துள்ள போதிலும், அதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் உள்ளக மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர்களாக மொனிக்கா பின்டோ மற்றும் யுவான் இ மென்டிஸ் ஆகியோரே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர். இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று சனிக்கிழமை புறப்பட்ட அவர்கள், அதற்கு முன்னர் ஊடகங்களைச் சந்தித்து கருத்து வெளியிட்டிருந்தனர்.
சித்திரவதைகள் இன்னமும் தொடர்வது கவலையளிக்கும் ஒரு விடயமாகவே இருக்கிறது எனக் கூறிய யுவான் இ மென்டிஸ், “சித்திரவதைகளை முழுமையாக இல்லாதொழிக்க அரசு நடடிவடிக்கை எடுக்க வேண்டும். ஆயுத மோதல்கள் நீடித்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமற்செய்யப்பட்டுள்ளனர். அது தொடர்பில் நாடு தழுவிய விசாரணை தேவைப்படுகிறது. நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து நாடு ஜனநாயகத்தின் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றபோதிலும், இப்படியான விஷயங்கள் தடுக்கப்பட வேண்டும்.” என்றுள்ளார்.
இலங்கையின் நீதித்துறை சிறந்த கட்டமைப்புடன் இருக்கின்றபோதிலும், அதனை மேலும் வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மொனிக்கா பின்டோ தெரிவித்துள்ளார். கைது நடவடிக்கைகளின்போது பொலிஸார் சட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமது விஜயம் தொடர்பில் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக கூறிய மொனிக்கா பின்டோ, அந்த அறிக்கை விரையில் இலங்கை அரசிடம் கையளிக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.puthinamnews.com
இப்படியே சொல்லி சொல்லி அனைவரும் காலத்தைத் தள்ளுங்கள், எவனும் அவர்களைக் காப்பாற்ற ஒரு துரும்பையேனும் கிள்ளிப் போட்டுவிடாதீர்கள், போங்கடா நீங்களும் உங்கள் சுயநல அரசியலும்..!!
இப்படியே சொல்லி சொல்லி அனைவரும் காலத்தைத் தள்ளுங்கள், எவனும் அவர்களைக் காப்பாற்ற ஒரு துரும்பையேனும் கிள்ளிப் போட்டுவிடாதீர்கள், போங்கடா நீங்களும் உங்கள் சுயநல அரசியலும்..!!
சீமான் வென்றால் இவர்கள் தலை எழத்து மாற்றப்படலாம்