பிணைக்கைதிகளுக்கு தண்டனை வழங்கிய சிறுவர்கள்: வெளியான வீடியோ

fra1fra2பிரான்ஸ் நாட்டு சிறுவர்கள் இருவர் ஐ.எஸ் குழுவினரின் பிணைக்கதிகளுக்கு மரண தண்டனை வழங்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ்.குழுவினர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் பிரான்ஸ் நாட்டவரான இரு சிறுவர்கள், ஒற்றர்கள் என ஐ.எஸ்.அமைப்பால் குற்றம்சாட்டப்பட்ட சிரியா நாட்டவரான இரண்டு நபர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த சிறுவர்கள் இருவரும் பயிற்சி மேற்கொள்வது போன்றும் அந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிரான்ஸ் அதிபரின் புகைப்படத்தில் துப்பாக்கியால் சுட்டு அந்த சிறுவர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர்.

fra3சமீப காலமாக ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளில் ஐ.எஸ் அமைப்பு கடுமையான தாக்குதலை எதிர்கொண்டு வருவதுடன் முக்கிய பகுதிகளையும் கூட்டுப்படைகளிடம் இழந்து வருகிறது.

இந்த நிலையில் இருந்து உலகத்தாரின் பார்வையை திருப்பும் நோக்கில் இந்த சிறுவர்கள் வீடியோவை ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

சிறுவர்களை மட்டுமே கொண்ட ஒரு ராணுவத்தை ஐ.எஸ் அமைப்பு உருவாக்கி வருவதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியிட்டு வந்த அவர்கள் தற்போது சிறுவர்களை தண்டனை வழங்கவும் பயன்படுத்தியுள்ளனர்.

-http://news.lankasri.com