அரசாங்கத்தின் தடையை மீறி வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வொன்றை நடத்தியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூருவதற்காக மட்டுமே தான் இந்த நிகழ்வை நடத்துவதாகவும், யுத்தத்தில் உயிரிழந்த அனைவரும் விடுதலைப் புலிகள் அல்லவென்றும், ஏராளமான பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாகவும் அவர் அதன்போது தெரிவித்துள்ளார்.
எனினும் எந்தவகையான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளும் நடத்தப்படக் கூடாது என்று அரசாங்கம் விதித்திருந்த கட்டுப்பாடுகளை மீறியே அவர் இந்த நிகழ்வை நடத்தியுள்ளார்.
அத்துடன் இந்த நிகழ்வில் அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவரான விஜயகலா மகேஸ்வரனும் கலந்து கொண்டமை தவறான விடயம் என்றும் ஒரு ஊடகம் தெரிவித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் அஞ்சலி நிகழ்வில் தமிழீழ வரைபடம் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் சிங்கள ஊடகமொன்று கருத்து தெரிவித்துள்ளது.
-http://www.tamilwin.com
இலங்கை வட மாநில முதல்வர் ஐயா விகனேசுவரன் அவர்களின் மனித நேய உணர்வு உலகில் எல்லா தலைவர்களுக்கும் வர வேண்டும். ஒரு நாட்டின் உள் நாட்டு கலவரத்தில் நாட்டுக்கு உயிர் நீத்த காவலற்ற சதியில் உறவுகளை உயிர்களை உணர்வுகளை இழந்த மக்களுக்கு துக்க நிகழ்வை நடத்த மதிய அரசு மறுப்பது புத்தன் மக்களுக்கும் உலக சமய மனித சமாதானத்துக்கும் பெருத்த கேவலம் என்று மலயசிய தமிழர் தேசியப பேரவையின் பொதுச் செயலாளர் தமிழர்த்திரு பொன் ரங்கன் தமதறிக்கையில் தெரிவித்துள்ளார்.