தொடர்ந்தும் ஓரங்கட்டப்படும் இலங்கை தமிழ் மக்கள் இந்த நிலையை மாற்றுமாறு அமெரிக்கா வலியுறுத்தல்

america_flagஇலங்கைத் தமிழ் மக்கள் , தாங்கள் தொடர்ந்தும் அடக்கப்படுவதாக உணரும் எண்ணப்பாட்டை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் வலிமையான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் பல ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களாகியும் , இலங்கை தமிழர்கள் இன்னும் தாம் ஒதுக்கப்படுவதாகவே உணர்கின்றனர் என்று அமெரிக்காவின் சிரேஸ்ட அரசியல்வாதியான டான்னி கே டேவிஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு காணப்படும் நிலை மாற வேண்டும். இந்த நிலைமையை போக்க இலங்கை அரசு வலிமையான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்

மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் நாட்டில் நிறுவப்பட்டதை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலர் உறுதிமொழிகளை தமிழர்களுக்கு வழங்கி வருகின்றனர்.எனினும் திறனான செயற்பாடுகள் இன்மையால், தற்போது அந்த உறுதிமொழிகள் மீளப்பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் மீளமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரை இராணுவ விடயங்களில் நிபந்தனையுடனேயே செயற்பட வேண்டும் என்றும் மேலும் அவர் கோரியுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: