ஜெயலலிதாவின் வெற்றி இலங்கைக்கு ஆபத்தானது என எச்சரிக்கை விடுக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வடக்கு தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொடுத்து தனித் தமிழீழத்தை பெற்றுக் கொடுக்கும் “இந்தியாவின்” தலையீடு இலங்கைக்குள் அதிகரிக்கும் என்றும் அவ்வியக்கம் தெரிவித்தது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் வசந்தபண்டார மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்நாட்டில் அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஏனைய கட்சிகள் பலமிழந்து ஜெயலலிதாவின் பலம் ஓங்கியுள்ளது. இது இலங்கைக்கு ஆபத்தானதாகவே அமையும்.
ஏனென்றால் ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை வெற்றி பெற்றால் இலங்கையின் வடபகுதி தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொடுப்பேன்.கச்சதீவை மீட்பேன் என்றெல்லாம் உறுதிமொழி வழங்கினார்.
இந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் ஜெயலலிதா அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்.இதன்போது இந்தியப் பிரதமர் மோடி இதனை எதிர்க்கமாட்டார். தனித்து அதிகப் பெரும்பான்மை பெற்ற தமிழ்நாட்டு முதலமைச்சரை பகைத்துக் கொள்வதை மோடி விரும்பமாட்டார்.
எனவே இந்தியாவின் மத்திய அரசின் ஆதரவுடன் ஜெயலலிதா இலங்கையில் வடபகுதி தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொடுக்கும் திட்டங்களை முன்னகர்த்துவார்.
சுயநிர்ணய உரிமை கிடைத்த பின்பு தனித் தமிழீழம் என்பது தானாகவே உருவெடுக்கும். அதனை தடுக்க முடியாது. அதேபோன்று சட்டரீதியாக இலங்கைக்கு சொந்தமான கச்சதீவும் பறிபோகும் ஆபத்தும் உள்ளது.
கடந்த காலங்களை விட இலங்கையில் இந்தியாவின் தலையீடுகள் அதிகரிக்கும்.
எனவே ஜெயலலிதா முதலமைச்சரானது இலங்கைக்கு ஆபத்தானதாகவே அமையும் என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித் தார்.
-http://www.tamilwin.com
அடாடா! நல்ல கற்பனை! அம்மையார் மீது ஊழல் வழக்கு இருக்கும் வரை அவர் மத்திய அரசாங்கத்தின் தலையாட்டி பொம்மை தான்! அப்படி நீங்கள் சொன்னது போல அவர் நடப்பார் என்றால் நானே அவர் காலில் விழுவேன்!
எதுவும் நடக்கும் ஆனால் நடக்காது.
கற்பனையில் கூட காண முடியாது.
ஆயியகோ … விடுங்கப்பா இந்த இலங்கை பிரச்சனையை. இந்த பிரச்சனையை வைச்சே தமிழ் நாட்டை முட்டாள்களின் கூடமாக மாற்றியது போதாதா?
அங்கு உள்ளதே முட்டாள் பரம்பரைகள் …மாற்றுவதற்கு என்ன இருக்கிறது ?
ஐயா மன்னன் அவர்களே -எங்கே தமிழன் இருந்தாலும் அது தமிழர் பிரச்சனை . எங்கே முஸ்லிம் இருந்தாலும் அது எல்லா முஸ்லிம் பிரச்சனை –அறிய வில்லையா? நாம் ஒற்றுமையாக இருந்தால் தான் மற்றவன் சிறிது சிந்திப்பான் நம்மை தொடு வதற்கு. நான் யாரையும் சாட விரும்ப வில்லை. தமிழர்கள் எங்கிருந்தாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும்.
1. “வெற்றி பெற்றால் இலங்கையின் வடபகுதி தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொடுப்பேன்.கச்சதீவை மீட்பேன்” என்றெல்லாம் உறுதிமொழி கொடுத்தாரா? இந்த அம்மையாரின் பேச்சை நம்புவது மண்குதிரில் காலை வைப்பதற்க்குச் சமம். இந்த அசிங்கமான அரசியல் கலாச்சாரமெல்லாம் இந்த அம்மையாருக்கு கைவந்தக் கலை. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் செய்து விடுவார். பிரதமர் மோடிக்கு வெறும் கடிதம் எழுதி தன் கடைமையைச் செய்து விடுவார். இதோ சொன்னபடி முடித்துவிட்டேனென்று ஒருப் பாவமும் அறியாத மக்களிடம் சொல்லிவிடுவார். அவர்களும் நம்பிவிடுவார்கள். இன்னொன்றை யும் உறுதியாக நம்புவோம்; இந்தியா எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட மாட்டார்கள். ஏனென்றால் இலங்கை நட்பு நாடு. ஒருவேலை தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக வேண்டுமானால் செயல்பட்டாலும் படுவார்கள். இதுதான் உண்மை.