தீவிரவாத தலைவன் முல்லா அக்தர் மன்சூர் ஆளில்லா விமானம் தாக்குதலில் பலி

mullah aktharபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஆப்கானிஸ்தானின் உளவு ஏஜென்ஸியும் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க சிறப்புப் படையின் ஆளில்லா விமானங்கள் தலீபான் தலைவன் மற்றும் கூட்டாளிகளை குறிவைத்து தொடர்ந்து கண்காணித்து வந்தது.

இந்நிலையில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திற்கு உட்பட்ட அகமது வால் நகரத்தில் மன்சூர் மற்றும் அவனது கூட்டாளி ஒரு காரில் சென்று கொண்டிருந்தபோது ஆளில்லா விமான தாக்குதலில் இருவரும் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க இந்த தகவலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

-http://news.lankasri.com