1980ஆம் ஆண்டு முதல் காணாமல் போனவர்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் மூவாயிரம் முறைப்பாடுகள் பொய்யானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் தொடர்பான விசாரணையை மேற்கொண்ட ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கோவைகள் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திடம் கையளிக்கப்படவுள்ளன.
இந்த நிலையில் தமது கருத்தை வெளியிட்டுள்ள பரணகம,
குறித்த மூவாயிரம் முறைப்பாடுகளை தாம் பிரித்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இல்லையெனில் நாட்டில் காணாமல் போனோரின் எண்ணிக்கை அதிகமாகவே காட்டப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆணைக்குழுவுக்கு சில முறைப்பாடுகள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மூன்று தடவைகளுக்கு மேல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com