விடுதலைப் புலிகளின் பெண் கடற்புலிகளின் தலைவியாக செயற்பட்டவரென பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகக் கொண்ட பகிரதி முருகேசு அல்லது மீலர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார்.
02-03- 2015ம் திகதி பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக கட்டுநாயகா விமான நிலையத்திற்கு தனது 8 வயது மகளுடன் வந்திருந்த பகிரதி முருகேசு; பயங்கரவாதத் தடைப்பரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பொழுது தாயைப்பிரிய மறுத்த பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையைக் கொண்ட பகிரதியின் ஒரே மகளும் பயங்கரவாதத் தடைப் பொலிசாரினால் அழைத்துச் செல்லப்பட்டனர் பின்னர் சந்தேக நபரான பகிரதி முருகேசுவிற்கு எதிராக விசாரணையை நடாத்திய பயங்கரவாதத் தடைப்பிரிவு பொலிpசார் விசாரணையின் முதல் அறிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.
அந்த அறிக்கையில் சந்தேக நபரான பகிரதி முருகேசு 1991ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து ஆயதப் பயிற்சிகள் பெற்ற பின்னர் 1996ஆம் ஆண்டு பெண் கடற்புலிகளின் தலைவியாகச் செயற்பட்டதாகவும் பின்னர் நாட்டை விட்டு வெளியேறி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றிருந்த சந்தேக நபரான பகிரதி முருகேசு இலங்கைக்கு வந்து மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல கட்டுநாயகா விமான நிலையத்திற்கு வந்த வேளையில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறுவதாக முதல் ; அறிக்கையும்; மேலதிக விசாரணை அறிக்கைகளையும் தாக்கல் செய்தனர்.
சந்தேக நபர் ;சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசாதனது வாதத்தில் 02-03- 2015ம் திகதி கைது செய்யபட்ட பகிரதி முருகேசுவிற்கு எதிராக விசாரணைகளை நடாத்திய பயங்கரவாதத் தடைப்பிரிவு பொலிpசார் சந்தேக நபர்மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு; அறிக்கைகளை மட்டும் தாக்கல் செய்துள்ளனர் அறிக்கைகளை சான்றாகக் கொண்டு வழக்கத் தாக்கல் செய்ய முடியாது .
மேலும் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய போதிய சான்றுகள் காணப்படின் வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகக் கொண்ட சந்தேக நபரான பகிரதி முருகேசு விடுதலை செய்யப்படவேண்டும் பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையைக் கொண்ட பகிரதி முருகேசுவின் ஒNர் மகள் அவரது தாயார் கைது செய்யப்பட்டதிலிருந்து கடந்த 15 மாதங்களாக தனது பிறந்த நாட்டிற்கு செல்ல முடியாததினால் கல்வியை தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு சந்தேக நருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய போதிய சான்றுகள் உள்ளனவா என பயங்கரவாதத ;தடைப் பொலிசார் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை பெற்று சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை; இந்த நீதிமன்றிற்கு அறிவிக்க வேண்டும் ;என தனது வாதத்தை முன்வைத்த வேளையில் சட்டமா அதிபரின் ஆலோசனைப் பெற்று சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றிற்கு ; தெரிவிப்பதாக பொலிசார் தெரிவித்திருந்த நிலையில் நேற்றைய தினம் இந்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப் பட்ட வேளையில் சட்டமா அதிபரினால் சந்தேக நபரை விடுதலை செய்ய எடுக்கப்பட்ட முடிவின் பிரதியை பொலிசார் நீதிமன்றில் சமர்ப்பித்ததையடுத்து கொழும்புநீதலான் நீதிமன்ற நீதிபதி திருமதி அருணு ஆட்டிகல பகிரதி முருகேசுவை விடுதலை செய்தார்.
சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணிகளான செல்வராஜா துஷ்யந்தன்ரூபவ் நளனி இளங்கோன் அனுசரனையில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா ஆஜரானார்.
-http://www.athirvu.com