உடல்நலன் மீது அதிக கவனம் செலுத்தும் நாடுகள் எவை தெரியுமா?

sweedish peopleசர்வதேச அளவில் உடல்நலன் மீது அதிக கவனம் செலுத்தி ஆரோக்கியமாக வாழும் குடிமக்கள் உள்ள நாடுகளின் தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

உலகளவில் உடல்நலன் மீது கவனம் செலுத்தி வரும் குடிமக்கள் நிறைந்துள்ள நாடுகள் குறித்து Good Country Index என்ற அமைப்பு அண்மையில் ஆய்வு ஒன்றை எடுத்துள்ளது.

உலகம் முழுவதும் 163 நாடுகளில் எடுத்த ஆய்வு முடிவுகளின் தொகுப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

உடல்நலன் மீது கவனம் செலுத்தி ஆரோக்கியமாக வாழும் நாடுகளின் பட்டியல்:

  1. சுவீடன்
  2. பிரித்தானியா
  3. கனடா
  4. பின்லாந்து
  5. சுவிட்சர்லாந்து
  6. டென்மார்க்
  7. அவுஸ்ரேலியா
  8. நோர்வே
  9. பெல்ஜியம்
  10. நெதர்லாந்து

இதே பட்டியலில் அமெரிக்கா(12வது இடம்), ஜேர்மனி(13வது இடம்), பிரான்ஸ்(18வது இடம்), இந்தியா(37வது இடம்), இலங்கை(110வது இடம்) ஆகிய இடங்களிலும் உள்ளன.

-http://news.lankasri.com