பொதுமக்கள் முன்னிலையில் 19 பெண்களை எரித்து கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகள்

isis_sells_002ஈராக் நாட்டில் யாஸிதி இனத்தை சேர்ந்த 19 பெண்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் இரும்பு கூண்டில் அடைத்து கொடூரமாக எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கில் உள்ள மோசூல் நகரத்தை சேர்ந்த Abdullah al-Malla இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

சிறுபான்மை இனத்தவரான குர்து யாஸிதி பெண்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தி சென்று செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் விருப்பத்தை நிறைவேற்றாத பெண்களை அவர்கள் கொடூரமாக கொலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தீவிரவாதிகளின் விருப்பத்திற்கு பணிய மறுத்த 19 யாஸிதி பெண்களை கடந்த வியாழக்கிழமை அன்று இரும்புக்கூண்டில் ஐ.எஸ் தீவிரவாதிகள் அடைத்தனர்.

பின்னர், அந்த கூண்டுகளை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் இழுத்து வந்து கூண்டுக்குள் இருந்த 19 பெண்கள் மீது திரவகம் ஊற்றி தீயிட்டு எரித்து கொன்றுள்ளனர்.

கண் முன் நிகழ்ந்த கொடூரத்தை தடுக்க முடியாமல் பொதுமக்கள் திரும்பி சென்றுவிட்டதாக அந்த செய்தியாளர் தகவலை வெளியிட்டுள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: