இடைமாற்ற கால நீதியை நிலைநாட்டுவது தொடர்பில் இலங்கை வழங்கிய உறுதிமொழியை நடைமுறைப்படுத்தும்போது சகல இலங்கையரும் உள்ளடக்கப்படுவதுடன்,
அவர்களின் அர்த்தமுள்ள பங்களிப்பும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனீவாவில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அமுல்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளில், இடைமாற்றகால நீதி தொடர்பில் விரிவான திட்டமொன்று தேவையாகவுள்ளது. ஒருங்கிணைந்த செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கும், சரியான செயற்பாடுகளை வரிசைக்கிரமமாக முன்னெடுப்பதற்கும் இது வழிவகுக்கும் என்றும் சையிட் அல் ஹுசைன் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.puthinamnews.com