ஜெனிவாவில் இன்று மாலை ஜேர்மனியை தளமாகக் கொண்டியங்கும் Society for Threatened Peoples International (STPI) அமைப்பினால் இன்றைய தினம் 3:30 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்தாய்வின் போது ‘வடக்கின் குரல்கள்` என்ற தலைப்பில் ஆவணப்படுத்தப்பட்ட காணொளி ஒன்று ஒளிபரப்பட்டிருந்தது.
அக்காணொளியில் வழக்கறிஞர் ரட்ணவேல், மற்றும் அருட்தந்தை ரவிச்சந்திரன் உட்பட பலரது குரல்கள் ஓங்கி ஒலித்துள்ளன.
இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த குரல்கள் இலங்கையின் ஆட்சி அமைப்புத்தான் மாறி இருக்கின்ற போதிலும் இலங்கையின் செயற்பாடுகளில் எதுவிதமான மாற்றமோ முன்னேற்றமோ ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், லண்டனில் இருந்து வருகைதந்திருந்த வழக்கறிஞர் சிவானி ஜெகராஜா அவர்கள் இலங்கையின் சட்டரீதியான பிரச்சினைகள், அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துதல் என விளக்கமாக எடுத்துரைத்ததோடு, அமைச்சர் பரோன் அன் லே அவர்களும் கலந்துகொண்டார்,
அவரிடம் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பில் கலந்துகொண்ட செந்தில்குமார் இலங்கை தொடர்பிலான கேள்வியைக் கேட்டபோது, இலங்கையில் சமாதானம், சமத்துவத்தை நிலைநாட்டுவதாயின் பல உலக நாடுகளோடு சேர்ந்து கலந்தாலோசனை செய்து முடிவெடுத்தல் வேண்டும் என தெரிவித்திருந்தார்.
மேலும் இக்கலந்துரையாடலில் ஆண், பெண் சமத்துவமும் அவசியம் எனவும் பேசப்பட்டிருந்தது. ,இதில் கெலம் மைக்ரே கலந்துகொண்டிருந்த போதிலும் அவர் எக்கருத்தினையும் தெரிவிக்கவில்லை.
என்றபோதிலும் அவருக்கு பதிலாக லண்டனிலிருந்து ஸ்கைப் வழியாக ஒருவர் இலங்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com