ஐக்கிய நாடுகள் சபையின் 32ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், இலங்கை தொடர்பில் பல்வேறு பட்ட வாத பிரதிவாதங்கள் ஐ.நா சபையின் வெளியிலும் உள்ளேயும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன.
இதில் இலங்கையின் நிலைபாடுகள் எப்படி இருக்கப்போகின்றன? இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அநீதிகளுக்கு ஐ.நா சபையின் நிலைப்பாடு எப்படியான தன்மையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்பது பற்றி லங்காசிறி 24இன் செவ்வியில் ஆராயப்பட்டுள்ளது.
மேலும் தமிழர் அரசியலில் ஐ.நா சபையின் பங்களிப்பு சரியானதாக இருக்கின்றதா? தமிழர் அரசியல் ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கம் செலுத்துகின்றதா? என்பது தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்களுக்கு பிரான்சஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனரும், மனித உரிமை ஆர்வலருமான ச.வி.கிருபாகரன் எமது லங்காசிறி 24இன் செவ்வியில் இணைந்து கொண்டு தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com