அகதிகள் விவகாரம்! இந்தோனேசியாவுக்கு வலுக்கும் கடுமையான எதிர்ப்பு

eelam_rafugeesஇந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரைதட்டியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் படகை அனைத்துலக கடற்பரப்புக்குள் தள்ளிச் செல்லும் இந்தோனேசியாவின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளள.

சட்டவிரோத கடற்பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு பயணமான இலங்கை அகதிகள் படகு இயந்திரக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் தரைதட்டியது.

குறித்த அகதிகள் விவகாரத்தை இந்தோனேசியா மனிதாபிமானற்ற வகையில் அணுகுவதாக அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.

அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் இந்தோனேசியாவின் தொண்டர் நிறுவனங்களும், இதுகுறித்து கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

அத்துடன், மனிதாபிமான அடிப்படையில் படகில் உள்ள அகதிகளை தரையிறங்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை, அகதிகளுக்கான ஐ.நா முகவரமைப்பு பிரதிநிதிகள் குறித்த படகின் அருகே சென்று பார்வையிட்ட போதிலும், உள்ளே சென்று பார்வையிடுவதற்கு இந்தோனேசிய அதிகாரிகள் அவர்களை அனுமதிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

-http://www.tamilwin.com

TAGS: