தேவை விடுதலையா….? விளையாட்டுத் திடலா…?

kasianathanயாழ்ப்பாணத்தில் 9 தமிழர்களை சுட்டுக் கொன்றவருக்கு முள்ளிவாய்க்காலில்1.50லட்சம் தமிழர்களை சுட்டுக்கொன்றவர் விளையாட்டுத் திடல் திறந்திருக்கிறார்.

ஈழத் தமிழர்களுக்கு தற்போதைய தேவை விடுதலையா விளையாட்டுத் திடலா எனவிளாசியுள்ளார் கவிஞர் காசி ஆனந்தன்.

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக பராமரிப்பின்றிக் கிடந்த விளையாட்டுத் திடலை7கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து துரையப்பா விளையாட்டு அரங்கம் என்று பெயர்சூட்டி திறந்து வைத்துள்ளது இந்திய அரசு.

இந்த அரங்கத்தை டெல்லியில் இருந்தபடி வீடியோ கொன்பரன்ஸிங் மூலம் கடந்த 18ம்திகதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதற்காக யாழ்ப்பாணத்தில் நடந்த விழாவில்இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவும் கலந்துகொண்டனர்.

இது ஒருபுறம் இருக்க துரையப்பா பெயரில் விளையாட்டு அரங்கம் திறந்திருப்பதுதமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜாலியன் வாலாபாக்மைதானத்திற்கு ஜெனரல் டயர் பெயரை வைப்பார்களா? என பழ நெடுமாரனும் மகாத்மாகாந்தி நினைவிடத்திற்கு கோட்சே பெயரைச் சூட்டுவார்களா என வைகோவும்கொந்தளித்திருக்கிறார்கள்.

ஒரு விளையாட்டுத் திடல் விவகாரத்துக்கு அதுவும் யாழ்ப்பாணத்தில்திறக்கப்பட்டிருக்கும் திடலுக்கு இவர்கள் இருவரும் இந்தளவுக்கு ஆவேசப்பட என்னகாரணம்?

குழப்பத்தை தீர்க்க ஈழக்கவிஞரும் இந்திய ஈழத் தமிழர் நட்புறவுமையத்தில் தலைவருமான காசி ஆனந்தனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்.

யாழ்ப்பாணத்தில் விளையாட்டு அரங்கத்திற்கு துரையப்பா பெயர் சூட்டப்பட்டுள்ளதே.யார் இந்த துரையப்பா…

சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் தான் இந்த துரையப்பா. இவரது முழுப்பெயர் அல்பிரட் துரையப்பா சிவகுமரன். 1970 முதல் 1975 வரை யாழ்ப்பாண மேயராகஇருந்தார்.

1974ம் ஆண்டு 3வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணம்முத்தவெளி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றபோது போலீஸ் படை மண்டபத்திற்குள்நுழைந்து தமிழர்களையும் தமிழ் அறிஞர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கியது.

மேலும் பொலிஸ் துப்பாக்கியால் சுட்டு முன்கம்பத்தை சாய்த்ததில் 9 தமிழர்கள்மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்கள்.மாநாடு நடந்த மண்டபத்திற்குள் பொலிஸாரை விட்டு அடித்தது மேயர் துரையப்பா தான்என்பது மக்களின் எண்ணம்.

இதனால் யாழ்ப்பாண மக்களால் துரோகி என அடையாளம்காணப்பட்டார் மேயர் துரையப்பா.பின்னர் ஈழத் தமிழர் விடுதலை போராட்டம் தொடங்கியபோது துரையப்பாகொல்லப்பட்டார். பிரபாகரந்தான் அவரை சுட்டுக்கொன்றார் என்ற செய்தி பிற்பாடுவெளிவந்தது.

துரையப்பா இறந்த பின்னர் அந்த மண்டபத்தில் இருந்த அவரது பெயரை மக்கள்நீக்கிவிட்டனர். ஆனால் தற்போது அந்த துரையப்பா பெயரில் விளையாட்டுத் திடல்திறந்திருக்கிறார் இலங்கை ஜனாதிபதி மைத்ரி.

அதாவது யாழ்ப்பாணத்தில் 9 தமிழர்களை சுட்டுக்கொன்ற துரையப்பாவுக்குமுள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்களை சுட்டுக் கொன்ற இலங்கை அரசினால்விளையாட்டுத் திடல் திறக்கப்பட்டிருக்கிறது.முள்ளிவாய்க்கால் சம்பவத்தின்போது மைத்ரி தான் பாதுகாப்பு அமைச்சர்.

எனவேதமிழர்கள் சாவுக்கு மகிந்த சமமான பங்கு மைத்ரிக்கும் இருக்கிறது.இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் இந்தியாவும் கலந்து கொண்டிருப்பது எங்களுக்குவருத்தம். தமிழ் மக்களின் மனமும் புண்பட்டிருக்கிறது.

எதிர்காலத்திலாவதுஇந்தியா முழுமையாக எங்களுடன் இருந்து எங்கள் விடுதலைக்கு துணை நிற்கவேண்டும்என பணிவுடன் கோரிக்கை வைக்கிறேன்.

துரையப்பாவை பிரபாகரன் தான் சுட்டுக் கொன்றார் என்கிறபோது இந்திய அரசு எப்படிஉங்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கிறீங்க?

மேஜர் துரையப்பாவை பிரபாகரந்தான் சுட்டார் என்பதால் இந்திய அரசு விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தது சரிதானே என சிலர் வாதாடுகிறார்கள்.

ஆனால் துரையப்பா கொலைக்குப் பின்னர்தான் இந்திய அரசும், இந்திரா காந்தியும்பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதம் கொடுத்து போர்பயிற்சியும் அளித்தார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

பின்னாளில் நடந்த சிலவிரும்பத்தகாத நிகழ்வுகளால்தான் இந்தியாவுடன் சிறு விரிசல் ஏற்பட்டு விட்டது.துரையப்பா இறந்து 41 ஆண்டுகளான நிலையில் இலங்கை அரசு திடீரென தற்போது அவரதுபெயரில் விளையாட்டுத் திடல் திறக்கவேண்டிய காரணம் என்ன?இலங்கையில் எல்லாம் வழமைக்கு திரும்பி விட்டது.

விளையாட்டு நிகழ்ச்சிகளெல்லாம்நடத்தி மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என்கிற பொய்யான நாடகத்தை அரங்கேற்றவேஇந்த விளையாட்டுத் திடல் நிகழ்வை நடத்தியிருக்கிறது இலங்கை அரசு. ஆனால் உண்மைநிலை அதுவல்ல.

விளையாடிக் களிக்கிற அளவுக்கு அங்கே மக்களின் நிலை இல்லை.விடுதலைக்கான தேடல் முன்பை விட கூடியிருக்கிறது.

முள்ளிவாய்க்கால்சம்பவத்திற்கு முன்பு இருந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை.அப்படியா…? ஆனால் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்து அனைத்து வசதிகளையும்செய்வதாக இலங்கை அரசு கூறிவருகிறது.ஐ.நா. மன்றப் பேராளராக இருக்கும் ஜீயான் இ.மென்டிஸ் ஈழத்தில் சுற்றுப்பயணம்செய்து சில உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்.

அதில் ஈழத்தில் நிலைமை இன்னும்மாறவில்லை. பழைய நிலை அப்படியே இருக்கிறது. இளைஞர்களை கிரிக்கெட் மட்டையாலும்தடியாலும் அடிக்கிறார்கள். கைகளைப் பின்னால் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டுத்தாக்குகிறார்கள். மண்ணெண்ணெய் தோய்ந்த பொலீத்தீன் பையால் முகத்தை மூடிசித்திரவதை செய்து மர்ம உறுப்பை சிதைக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

அண்மையில் அங்கு சென்ற தமிழக பத்திரிகையாளர் இன்றைக்கும் ஒரு லட்சம் தமிழர்கள் இராணுவ முகாமுக்குள் அடைபட்டு கிடக்கிறார்கள். தமிழ் கிராமங்களில்புத்தர்சிலையை நிறுவி தமிழர்களின் அடையாளத்தை அழித்து திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தை அரங்கேற்றி வருகிறது இலங்கை அரசு என கூறியிருக்கிறார்.

யாழ்ப்பாணத்திலிருக்கும் சிங்கள ராணுவ தளபதி மகே சேனநாயக்கயாழ்ப்பாணத்தைவிட்டு 2 லட்சம் ராணுவ வீரர்களும் வேறு எங்கும் போக மாட்டார்கள்என உறுதியுடன் கூறுகிறார்.

தமிழ்ப் பெண்கள் சுதந்திரமாக தெருவில் நடமாடமுடியவில்லை என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகிறார். வெள்ளை வண்டி கடத்தல்தொடர்கிறது. இத்தனை கொடுமைகளால் துடிக்கும் மக்களுக்கு இப்போது தேவைப்படுவதுவிடுதலையா….. விளையாட்டுத் திடலா…?

இப்பிரச்சினைகளுக்கு என்ன தான் தீர்வு?

ஈழத் தமிழர்களுக்கு குறைந்தபட்ச சலுகை அளிப்பது 13வது அரசியல் சாசன திருத்தச்சட்டம். இதை அமுல்ப்படுத்த இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் போட்டு 30ஆண்டுகளாகியும் இன்னும் அணு அளவு மதிப்புக்கூட கொடுக்காமல் குப்பையில்வீசியிருக்கிறது இலங்கை அரசு. குறைந்தபட்சம் வடக்கு – கிழக்கு மாகாணங்களையாவதுஒருங்கிணைக்க இலங்கையை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்றார்.

– Kumudam

TAGS: