விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு பொறுப்பான தூதுவரின் சிரேஷ்ட ஆலோசகராக இருக்கும் பேராசிரியர் மைக்கல் நியூட்டன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் சுமத்தியுள்ள யுத்தக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், விடுதலைப் புலிகள் போரின்போது பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தியது ஒரு யுத்தக்குற்றமாகும்.
அத்துடன் அவர்கள் கனரக ஆயுதங்கள் கொண்டு இராணுவத்தினர் மீது தாக்குதல்களை மேற்கொண்டிருந்தார்கள்.
அத்துடன் விடுதலைப் புலிகள் தரப்பு மற்றும் பாதுகாப்புத் தரப்பினருக்கிடையிலான மோதல்கள் இராணுவ ரீதியானவை என்றும் பேராசிரியர் நியூட்டன் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com


























ஈழ மக்கள் இன அழிப்பை அமெரிக்கா முன்னின்று பல பேடி நாடுகளுடன் நடத்தியதை எவ்வாறு வர்ணிப்பது மைக்கல் நியூட்டன்?
தமிழனுக்கு என்று நாடு ஒன்று இல்லாதவரை ,தமிழன் ஒன்றுசேராதவரை ,தமிழனிடமிருந்து ஒன்றும் கிடைக்கப்போவதில்லை எனும் நிலை நீடிக்கும்வரை அமெரிக்கா மட்டும் அல்ல எந்த ஒருநாடும் நமது இன உணர்வையும் நமது நலனையும் மதிக்கப்போவதில்லை .
இவன் சிங்களவனிடம் பணம் பெற்றிப்பான்– காரணம் அமெரிக்காவில் பணத்திற்காக வக்காலத்து வாங்கும் கூட்டம் ஒன்று இருக்கிறது. அதில் இவனும் ஒருவனாக இருந்தாலும் ஆச்சரியப்படுவததற்கு இல்லை. அது ஒரு பெரிய வியாபாரம்.