2010ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை படையினர் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் அது சட்டவிரோதமானது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம இதனை தெரிவித்துள்ளார்
ஆங்கில ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. கொத்துக்குண்டுகள் தொடர்பான மாநாட்டின் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தக்கூடாது என்ற நியதி 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியே அமுலுக்கு வந்தது.
எனவே இராணுவ தேவைக்கருதி இலங்கை படையினர் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் அது சட்டவிரோதமல்ல என்று பரணகம தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர், இம்முறை வெளியிட்ட வாய்மூல அறிக்கையில் கொத்துக்குண்டுகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று கோரியிருந்த நிலையிலேயே பரணகமவின் கருத்து வெளியாகியுள்ளது.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அதனை இராணுவம் மறுத்திருந்தது.
இந்நிலையில், இலங்கை இராணுவத்தின் மறுப்பை ஐக்கிய நாடுகளும் ஏற்றுக்கொண்டதாக பரணகம சுட்டிக்காட்டியுள்ளார்.
-http://www.tamilwin.com