உண்மை கண்டறியும் ஆணைக்குழு – குற்றவாளிகளை தப்பிக்க விடும் உத்தியா?

sl_war_crimesபோரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை உருவாக்குவதில்அரசாங்கம் உறுதியுடன் இருப்பதா வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த வாரம் கொழும்பில்நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

மீறல்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்பதை அவர் தனது கருத்தின் ஊடக வலியுறுத்த முனைந்திருந்தார்.

எனினும், பொறுப்புகூறல் முறை எவ்வாறானதாகஇருக்கப்போகிறது. என்ற கேள்விக்கான விடையை அரசாங்கம் இதுவரை அளிக்கவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத்தீர்மானத்தில் இணங்கிக் கொண்டபடி, பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவதற்கு அரசாங்கம்இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எல்லாமே வெறும் ஆலோசனை மட்டத்தில்தான்இருக்கிறதே தவிர, செயலுருப் பெறவில்லை எனினும்இந்த ஆண்டு முடிவுக்குள் உண்மை கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்பட்டுவிடும் என்பதை மங்களசமரவீர உறுதிப்படுத்தியிருக்கிறார். உண்மை கண்டறியும் ஆணைக்குழு எதனை நோக்கிச் செயற்படப்போகின்றது என்ற தெளிவு இன்னும் இல்லை.

ஆனாலும் குற்றங்கள் இடம்பெற்றனவாஎன்று கண்டறிவதற்குத் தான் அது முதலிடம் வழங்கப் போகிறதே தவிர, குற்றமிழைத்தவர்கள்மீது நடவடிக்கை எடுப்பது இதன் நோக்கம் இல்லை.

போரின் போது நிகழ்ந்த குற்றங்களைஇரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று படையினர் நேரடியாகத் சம்பந்தப்பட்ட குற்றங்கள், படையினர் நேரடியாக சம்பந்தப் படாத குற்றங்கள் இந்த இரண்டும் விதமான குற்றங்களும், போர்க்குற்றங்கள்என்ற வரையறைக்குள் அடங்கக் கூடியவைதான். ஆட்களை அடையாளம் கண்டு அல்லது. அடையாளம் காணமால்மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் மற்றும் பிற குற்றச்செயல்கள் முதலாவது வகை.

துப்பாக்கியால் சுட்டோ, கத்தியால்வெட்டியோ, வேறு வகைகளில் சித்தரவதைகளைப் புரிந்தோ, படுகொலைகளை செய்வது, பாலியல் துன்புறுத்தல்கள்,வன்புணர்வுகள், சித்திரவதைகள் என்பனவற்றை இதில் உள்ளடக்கலாம். களத்தில் நின்ற படையினர்நேரடியாகவே இதில் தொடர்புபட்டிருப்பவர்.

இத்தகைய குற்றங்கள் இடம்பெற்றமைக்கானஆதாரங்களாக பல, ஒளிப்படங்கள், வீடியோக்கள் என்பன வெளியாகியிருக்கின்றன. அவற்றில் பலவற்றில்படையினரின் முகத்தை அடையாளம் காணக்கூடியதாகவும் இருக்கிறது.

இந்த வகையில் போர்க்குற்றங்களில்ஈடுபட்டவர்களை கண்டறிந்து விசாரணைகளை முன்னேடுப்பதோ, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைநிருபிப்பதோ கடினமான காரியமில்லை.

ஆனால் அதற்கு படைத்த தலைமையின்ஒத்துழைப்பு அவசியம். ஏற்கனவே படையினரின் தொடர்புபட்டதாக கூறப்படும் லசந்த விக்கிரமதுங்கபடுகொலை மற்றும், பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்குத் தேவையான ஆவணங்களைசமர்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், படைத்தலைமை அதற்கு ஒத்துழைக்கவில்லை.

அந்த ஆவணங்கள் காணமற்போய் விட்டன.அவற்றைக் கண்டுபிடிக்க இரண்டு விசாரணை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று இராணுவத்தலைமையகம் கூறியிருக்கிறது. இது திட்டமிட்ட ஒரு செயல் என்பது தெளிவாக தெரிகிறது.

இது போன்று போர்குற்ற விசாரணைகள்விடயத்திலும், இராணுவம் ஒத்துழைக்க மறுத்தால் எதையும் செய்ய முடியாது.

போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம்சரணடைந்து காணமற்போன எழிலன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலரின் உறவினர்கள்,தொடுத்த ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணையின் போது, போரின் முடிவில் தமது படைப்பிரிவிடம்சரணடைந்தவர்களின் பட்டியல் 58 ஆவது டிவிஷன் தலைமையகத்தில் இருப்பதாக அதன் கட்டளை அதிகாரிமேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்தன ஒப்புக்கொண்டிருந்தார்.

அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறுமுல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளையிட்ட போதிலும் இதுவரை அந்த பட்டியல் ஒப்படைக்கப்படவில்லை.இதுபோன்று இராணுவம் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுத்தால் அல்லது இழுத்தடிக்க முனைந்தால்போர்குற்ற விசாரணைகளின் மூலம் நீதியை பெற்றுக் கொடுக்க முடியாது.

இரண்டாவது வகையான போர்க்குற்றங்கள்,படையினர் நேரடியாகத் தொடர்புபடாத அல்லது யாரென அடையாளம் கண்டறிய முடியாதவை. மருத்துவமனைகள்,பொதுமக்களின் வாழ்விடங்கள் மீது கண்மூடித்தனமான மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதல்கள்,விமான குண்டு வீச்சுக்கள், உணவு விநியோகத்தை தடை செய்தமை போன்றவற்றை இந்த வகைக்குள்உள்ளடக்கலாம்.

அதாவது இந்த வகையான குற்றங்களில்ஈடுபட்டவர்கள் யார் என்பது, பாதிக்கப்பட்டவர்கள் எவராலும் அடையாளம் காணவோ அடையாளம் காட்டவோ முடியாது இத்தகைய குற்றச்சாட்டுகளுக்குப்பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு தனித்தனியாக அவர்களைத் தண்டிப்பது கடினமானது, சவாலானது.

இவ்வாறான குற்றங்களுக்கு பொறுப்பாகஇருந்தவர்களைக் குற்றக்கூண்டில் நிறுத்துவதே பொருத்தமுடைய செயலாக இருக்கும், ஆனால்இதற்கு படைத்தரப்பின் ஒத்துழைப்பு இன்னும் அதிகமாகத் தேவைப்படும். ஏனென்றால், பொறுப்பாகஇருந்து கட்டளை வழங்கியவர்கள் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளாக அல்லது அரச பிரமுகர்களாகஇருப்பார்கள்.

அவர்களைக் காப்பாற்ற இராணுவத்துக்குள்ளேயும்,அரசாங்கத்துக்கு உள்ளேயும் நிறையப் பேர் பணியாற்றுவார்கள். எனவே இந்தக் குற்றங்களைநிருபிக்கத் தேவையான ஆதாரங்களைத் திரட்டுவதற்கு, படைத்தரப்பின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதுமிகச் சிக்கலானது.

இந்த பின்னணியில் தான், உண்மைகண்டறியும் ஆணைக்குழுவை அமைத்து குற்றங்கள் இடம்பெற்றனவா, அதற்கு யார் பொறுப்பாக இருந்தனர்என்று கண்டறியப்படும் என்று கூறியிருக்கிறார் மங்கள சமரவீர.

படையினரைத் தண்டிப்பதற்காக இந்தப்பொறிமுறை அமைக்கப்பட்டாது என்றும், அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். எனினும், நாட்டில்நன்மைக்காக குற்றமிழைத்தவர்களைத் தண்டனையிலிருந்து தப்பிக்கவிட முடியாது என்பதையும்அவர் கூறியிருக்கிறார்.

போர் தொடர்பான குற்றங்களுடன் தொடர்களுடன்தொடர்புடைய படையினர் மீது நேரடியான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அந்தக் குற்றங்களைஇழைக்க உத்தரவுகளை வழங்கிய கட்டளை அமைப்பின் மீதே நடவடிக்கை எடுக்கப்படுவதை இலக்குவைத்தே அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் பொறிமுறை நகர்த்தப்படும் என்று மங்கள சமரவீரவின்உரை தெளிவுப்படுத்துகிறது..

தென்னாப்பிரிக்க பாணியிலான உண்மைகண்டறியும் ஆணைக்குழு மூலம், குற்றமிழைத்தவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும்கலந்து பேச வைத்து, குற்றங்களை ஒப்புக் கொள்ள வைத்து, அதற்கு மன்னிப்புக் கோருவதன்மூலம், தண்டனையில் இருந்து விளக்களிக்கும் ஒரு முறையின் மீது அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவோ,இந்த உண்மை கண்டறியும் ஆணைக்குழு வெற்றியளிக்காது என்று கூறுயிருந்தார்.குற்றத்தை ஒப்புக்கொள்ளும்பாரம்பரியம், தென்னாபிரிக்காவில் வெற்றி பெற்றதைப்போன்று இலங்கையில் அது சாத்தியமில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

எனினும், நேரடியாகப் போர்குற்றங்களில்ஈடுபட்ட படையினரைத் தண்டனையில் இருந்து காப்பாற்ற இது ஒன்றே அரசாங்கத்துக்கு உள்ள வழியாகும்.அதேவேளை, குற்றங்களுக்குத் தூண்டிய கட்டளை அமைப்பைத் தண்டிக்கும், வகையிலான முயற்சிகளில்அரசாங்கம் கவனம் செலுத்தினாலும் அது எந்தளவுக்கு நம்பகமானதாக முன்னெடுக்கப்படும் என்ற சிக்கல் உள்ளது. நம்பகமான விசாரணைகளை உறுதிப்படுத்த, வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறவேண்டும் என்று தமிழர் தரப்பும், சர்வதேச சமூகமும் வலியுறுத்தினாலும், அரசாங்கம் இன்றுவரை அதற்கு சரியான பதிலை அளிக்கவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறமாட்டார்கள் என்று வாக்குறுதி அளிக்கின்றனர்.

ஆனால் , மங்கள சமரவீரவோ அது ஜனாதிபதியின்ஒரு கருத்து மட்டுமே, முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்றும், அது எல்லா தரப்பினரும்ஏற்றுக் கொள்ளும் ஒன்றாகவே இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும்விடயத்தில் கூட, ஜனாதிபதியின் கருத்து, தமிழர்களின் கருத்தைச் சார்ந்த ஒன்றாக இருக்காதபட்சத்தில், குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டிக்கும் விடயத்தில் அவர் எவ்வாறு அதற்குச்சாதகமாக இருப்பார்? என்ற கேள்வி எழுகிறது. குற்றமும் தண்டனையும் ஒட்டிப்பிறந்த இரட்டைப்பிறவிகள், இவற்றில் ஒன்றில் இருந்து மற்றது எப்போது பிரிக்கப்படுகிறதோ அப்போது நீதிசாகடிக்கப்பட்டு விடும் .

அதுமட்டுமன்றி, குற்றமிழைப்பவர்கள்தப்பித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் இலங்கைச் சமூகத்தில் பெருகி விடும். தற்போதையஅரசாங்கம், குற்றங்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுப்பதில் உறுதியாக இருக்காவிட்டால், படையினரைக் காப்பாற்றுவதில் மட்டும் உறுதியாகஇருக்காவிட்டால், படையினரைக் காப்பாற்றுவதில் மட்டும் உறுதியை வெளிப்படுத்தினால், அதுபாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தாது, நல்லிணக்கத்தையும் கொண்டு வராது.

-http://www.tamilwin.com

TAGS: