இந்திய மீனவர்களுக்கு இலங்கையில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை என்று மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்திய மீனவர்கள் இலங்கையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் வடபகுதி மீனவர்கள் வடமாகாண சபைக்கு முன்பாக மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் வருடத்தின் 75 நாட்களுக்கு இலங்கையின் கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட இந்திய மீனவர்களுக்கு இலங்கை அரசினால் அனுமதி வழங்கப்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, 75 நாட்கள் அல்ல 75 நொடிக்கு கூட அவர்களுக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவ்வாறு கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு அமைய கைது செய்யப்படும் மீனவர்கள் விடுவிக்கப்படும் இதேவேளை அவர்களது படகுகளோ, மீன்பிடி உபகரணங்களோ மீண்டும் அவர்களிடம் வழங்கப்படாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com

























