இறுதிப் போரின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை குறித்து விசாரணை நடாத்தப்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாக காணப்படுவதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடன் சர்வதேச சமூகம் நட்புறவு பாராட்டி வருவதாகவும் இதனால் விசாரணைகளுக்கான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் குறைவு எனவும் தெரிவித்துள்ளது.
தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் உள்ளிட்ட ராஜதந்திரிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களும் இதனையே பறைசாற்றுகின்றன.
இவ்வாறான ஓர் நிலையில் கொத்தணி குண்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் மிகவும் அரிது என அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
-http://www.tamilwin.com