இலங்கையில் ஒருபோதும் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமாயின் முதலில் தமிழ் அரசியல் கட்சிகளும், குழுக்களும் தமது சமஷ்டி கோரிக்கையை கைவிட வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
தமிழர் தரப்பு கிடைக்காத ஒரு சமஷ்டி முறைமையினை எதிர்பார்த்து செயற்பட்டு வருகின்றது. எனினும் இலங்கையில் ஒருபோதும் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஆகவே சமஷ்டியை உடனடியாக கைவிட்டு ஒன்றிணைந்து எதிர்கால ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதிகார பகிர்வு தொடர்பில் தமிழர் தரப்பு சர்வதேச பிரதிநிதிகளிடம் வலியுறுத்தி வரும் நிலையில் இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டை வினவிய போதே கட்சியின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
-http://www.tamilwin.com
சிங்கள ஆட்சியாளர்கள் சொல்லும் எதையும் தமிழர்கள் இனி என்றுமே நம்ப முடியாது; நம்பவும் கூடாது. சீன நாட்டு ஆட்சியாளர்கள் உலக அரங்கில் எப்படி பச்சை சுயநலத்த்தோடு தங்களின் நலன்கள் மட்டும் கருதி செயல்படுகின்றார்களோ அதுப் போலத்தான் இந்த சிங்கள ஆட்சியாளர்களும். சீனாவும் இலங்கையும் மிகவும் மிக நெருங்கிய நட்பு நாடுகள். என்றுமே இனம் இனத்தோடுதான் சேரும். சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களிடம் இன்றும் இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துக் கொள்வதற்கும் இந்திய அரசும் ஒரு முக்கியக் காரணமாகவும் இருக்கலாம். இந்தியாவின் செயல்பாடு முற்றிலும் சிங்களவர்களுக்கு ஆதரவாகவே மட்டும் இன்றும் இருக்கின்றது.
இது எல்லாமே இந்திய வடக்கத்தியனின் அக்கறை இன்மை -தமிழ் நாட்டு ஈன தமிழனின் முதுகு எலும்பில்லா தன்மை– எப்போதும் பெரிய பேச்சு பேசி ஒன்றும் செய்யமுடியாத கையால் ஆகா தன்மை. கட்ச தீவை தாரை வார்த்ததை மன்னிக்கவே முடியாது.