வடக்கு கிழக்கு இணைப்பை முஸ்லிகள் ஏற்றுக் கொள்ளவார்களா ?

tamileelamதமிழர் தரப்போடு முஸ்லிம் காங்கிரஸ் என்றுமே இணையாது ! இணையும் தேவை இல்லை!

ஒரு கொள்கை இல்லாது ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன நமக்கு முழு அமைச்சு அரை அமைச்சு கிடைத்தால் சரி என்கின்ற கூட்டம்தான் முஸ்லிம் அரசியல் கூட்டம். ஹக்கீம் அணியை எடுத்துக் கொண்டால் நாங்கள்தான் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி என்று பீத்தும் இவர்களுக்கு ஒரு கொள்கை உள்ளதா.? முஸ்லிம்களின் உரிமை என்று ஏதாவது பேசி பெற்றுள்ளர்களா? கடந்த 16 வருடங்களாக ஹக்கீம் தனது கட்சி தலைவர் பதவி மற்றும் அமைச்சர் பதவியை காப்பாற்றவே காலம் போய் விட்டது.

அதனால் தமிழ் கூட்டமைப்போடு முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் இணைந்து செல்லும் தேவையே கிடையாது.காரணம் சிங்கள அரசு முஸ்லிம் அரசியல் வியாபாரிகளுக்கு போடும் முள்ளு எலும்பு துண்டுகள் தமிழ் கூட்டமைப்பு கொடுக்குமா? .சிங்கள அரசு முஸ்லிம் அரசியல் வியபாரிகளுக்கு சகல கொடுப்பனவுகளும் கொடுக்கும் போது தமிழர் தரப்போடு இணையும் தேவையே முஸ்லிம் தரப்புக்கு கிடையாது.

இவர்களுக்கு சுகபோக வாழ்க்கையும் அமைச்சர் என்ற பந்தாவும்தான் அரசியலாக உள்ளது ஆக முஸ்லிம் அரசியலும் தமிழ் அரசியலும் என்பது மடுவுக்கும் மலைக்குமுள்ள இடைவெளியாகும்.

எதிர்வரும் மாகாணத் தேர்தலில் ரிசாத் அணியும் அதாவுல்லா அணியும் தேர்தல் பரப்புரையாக முன்வைக்கவுள்ள கருப்பொருள் வடகிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்க கூடாது என்றுதான் களமிறங்கவுள்ளார்கள்.அவர்களின் தேர்தல் வட கிழக்கு இணையக் கூடாது என்றுதான் முஸ்லிம் மக்களை உசுப்பேற்றவுள்ளார்கள்.

இணைப்பின் மூலம் முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன ? முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு என்ன ? முஸ்லிம்களின் விகிதாசாரம் குறையுமா ? அதன் மூலம் வேலை வாய்ப்பு மற்றும் ஏனைய விடயங்களில் முஸ்லிம்களின் விகிதாசாரம் பற்றிய தகவல்கள் முஸ்லிம்களை சென்றடையாமல் எப்படி முஸ்லிகளின் ஆதரவு கிடைக்கும்? முஸ்லிம்கள் தமிழர்கள் மீது கொண்டுள்ள சந்தேகம்கள் .முரண்பாடுகள் நீக்கப்பட்ட வேண்டும் .அதற்கு தமிழர் தரப்பு செயலில் இறங்க வேண்டும்.

கூட்டமைப்பு இன்னும் ஹக்கீமை நம்புவது ஏமாளித் தனம்

தமிழ் கூட்டமைப்பை பொறுத்த மட்டில் வடகிழக்கு இணைப்புக்கு கிழக்கில் ஹக்கீம் கட்சி மட்டும் ஆதரவு தந்தால் போதும் என்று நினைக்கின்றார்கள்.அதனால்தான் கூட்டமைப்பு இன்னும் இணைப்புக்கு ஹக்கீமை நம்பிக் கொண்டுள்ளார்கள்.இத்தனை ஏமாற்றிய பின்பும் ஹக்கீமை கூட்டமைப்பு நம்பிக் கொண்டிருகின்றது.

கிழக்கு இணைப்பு என்கின்ற விவாதம் அல்லது கருத்து ஒன்று வருகின்ற போது தமிழ் தரப்போடு அதாவுல்லா ரிசார்ட் மோதுவார்கள். அப்போது ஹக்கீம் குளிர் காய்வார்… எதுவுமே பேசாமல் சும்மா கம் என்று ஹக்கீம் இருப்பார்.எந்தவொரு கருத்தும் சொல்லமாட்டார். காரணம் தமிழர் தரப்புக்கு நல்ல பிள்ளை போன்று சும்மா இருப்பார்.

ஆனால் ஹக்கீம் கிழக்கு இணைப்புக்கு ஆதரவு தெரிவித்து காய் நகர்த்தினால் அன்று ஹக்கீம் அரசியல் தற்கொலைக்கு இறங்கி விட்டார் என்று அர்த்தப்படும்.

அதாவது ஹக்கீம் தன்னிச்சையாக முடிவு எடுத்து கிழக்கை வடக்குடன் இணைக்கும் முடிவுக்கு வந்தால் ஹக்கீம் அரசியல் எதிரிகள் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு ஹக்கீமுக்கு பெருத்த நெருக்கடியை கொடுப்பார்கள்.

கிழக்கு முஸ்லிம்களை ஹக்கீம் தமிழனுக்கு அடகு வைத்து விட்டார் என்று முஸ்லிம்கள் மத்தியில் ஒரு விஷம் கக்கப்படும் .அது ஹக்கீமின் தலைவர் பதவிக்கு ஆபத்தாகி விடும்.

கிழக்கு முஸ்லிம்களை ஹக்கீமிடமிருந்து பிரித்தெடுக்கும் வாய்ப்பாக இது அமைந்து விடும். அப்படி அமையுமானால் ஹக்கீம் அரசியல் தற்கொலைக்கு நிகரானதில்லையா? அப்படியானால் ஹக்கீம் தனது உயரிலும் மேலாக ஹக்கீமால் பார்க்கப்படும் கட்சி தலைவர் பதவி பறி போவதை ஹக்கீம் விரும்புவாரா ? ஏதோ ஒரு வகையில் ஹக்கீம் சம்மதம் கொடுத்தால் அது ஹக்கீமுக்கு அரசியல் .தற்கொலைதான்.

கிழக்கு மாகாண தேர்தல் என்றாலே ஹக்கீம் அணி கொண்டு வரும் பரப்புரையானது மறைந்த அஷ்ரப்பின் கனவு தேசம் காதல் தேசம் என்ற பசப்பு வார்த்தைகளை அள்ளிக் கொண்டுதான் வருகின்றார்கள். அப்போது முஸ்லிம் மக்களும் ஹக்கீம் அணியை நம்பி வாக்களித்து வருகின்றார்கள்.

கூட்டமைப்பு முஸ்லிகளின் மனங்களை வெல்ல வேண்டும்

வடக்கில் கூட்டமைப்பு ஒரு முஸ்லிம் நபருக்கு போனஷ் ஒன்றை கொடுத்து ஒரு முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர் பதவி வழங்கினால் மட்டும் போதுமா? கூட்டமைப்பு முஸ்லிம்களை இணைத்து கூட்டமைப்பில் ஒரு முஸ்லிம் பிரிவை அமைக்காமல் கிழக்கு இணைப்பு என்பது சாத்தியமேயில்லை. கூட்டமைப்பில் ஒரு முஸ்லிம் பிரிவு அமைக்கப்பட வேண்டும்.

கடந்த 5 வருடங்களுக்கு முன்பாகவே கூட்டமைப்பில் ஒரு முஸ்லிம் பிரிவு வேண்டும் என்று எழுதி வருகின்றேன். இந்தக் கோரிக்கையை வடக்கு முதல்வர் விக்கி அவர்கள் வட மாகாண முதல்வர் ஆகும் முன்பே ஏற்றுக் கொண்டுள்ளார் .ஆனால் கூட்டமைப்பு இதை இன்னும் ஏற்றுகொள்ளவில்லை.

முஸ்லிம் பிரிவு அமையுமானால் கிழக்கு மாகாணத்தில் இருந்து கூட்டமைப்பில் இணைய விரும்பும் முஸ்லிம்களை இணைத்து செல்ல வேண்டும் .பொது தேர்தல் மாகாண மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களில் கூட்டமைப்பு சின்னத்தில் முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்க வேண்டும் .

அப்படியான தருணத்தில் கிழக்கு மாகாணம் வடக்கில் இணைவதன் மூலம் முஸ்லிம்களின் பாதுகாப்பு மற்றும் சகல சந்தேகங்களும் பகிரங்கமாக சொல்லப்பட வேண்டும். கிழக்கு இணைப்பின் மூலம் முஸ்லிகளின் நன்மைகள் அறியப்பட வேண்டும் .தலையும் இல்லாது வாலும் இல்லாது முஸ்லிகள் இணைப்புக்கு ஆதரவு தர வேண்டும் என்று ஊடக அறிக்கை மட்டும் விட்டு தமிழர் பகுதிகளில் மட்டும் பேசினால் முஸ்லிகள் ஆதரவு எப்படிக் கிடைக்கும்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பகுதிகளில் ஒரு நாளாவது ஒரு கூட்டம் போட்டு முஸ்லிம் மக்களிடத்தில் கூட்டமைப்பு தங்கள் நிலைப்பாட்டை சொல்லியது கிடையாது.முஸ்லிம் பகுதிகளில் கூட்டமைப்பின் ஒரு கூட்டமாவது நடத்தக் கூடிய சூழலை கூட்டமைப்பு செய்யவில்லை.அதை விரும்பி தமிழ் கூட்டமைப்பு செய்யவுமில்லை.முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம் அணி ஒன்றின் ஆதரவு இன்றி கூட்டமைப்பு ஒரு கூட்டம் நடத்த முடியுமா?.

கூட்டமைப்புடன் இணையக் கூடிய பல முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் கிழக்கில் இருக்கின்றார்கள்.அவர்களை சேர்த்து அரவணைத்து அரசியல் செய்யக் கூடியவாறு கிழக்கில் ஒரு சூழலை தமிழ் கூட்டமைப்பு செய்யவில்லை அதை விரும்பவுமில்லை.

அம்பாறை .திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி இரண்டு முஸ்லிம் எம்பிக்களை பெறக்கூடிய நல்ல நிலை உள்ளது .அந்த நிலையை கூட்டமைப்பு இன்னும் பயன் படுத்தவில்லை.

தமிழ் முஸ்லிம்கள் ஒற்றுமைப்படாமல் கிழக்கு இணைப்பு ஒரு போதும் சாத்தியமில்லை என்பதை மட்டும் உறுதியாகக் சொல்லலாம்..மட்டக்களப்பில் இன்னும் ஏட்டுக்குப் போட்டியாக முஸ்லிம் தமிழ் அரசியல் வாதிகள் அறிக்கைப்போர் .அக்கப்போர் நடத்தி வருகின்றார்கள்.

ஒரே மொழி பேசும் ஒரே ஊரில் இருக்கும் முஸ்லிம் தமிழ் அரசியல்வாதிகளுக்குள் இன்னும் ஒரு ஒற்றுமை இல்லாது ஒரு புரிந்துணர்வு இல்லாது அக்கப்போர்களுக்கிடையே எப்படி இணைப்பு வரும்.சும்மா வாயளவில் மட்டும் இணைப்புக்கு முஸ்லிம்கள் ஆதரவு வேண்டும் என்றால் எப்படி இணைப்பு வரும்.எப்படி முஸ்லிம்களின் ஆதரவு வரும்.

இந்த இரண்டு இனங்களும் ஒற்றுமைப்பட வேண்டும் .இரண்டு இனங்கள் மத்தியில் இருந்து வரும் சந்தேகங்கள் களையப்பட வேண்டும்.இப்போது நல்ல சூழ்நிலை தோன்றியுள்ளது .சம்பந்தர் காலத்தில் இவைகள் தீர்க்கப்படாமல் போனால் இந்த ஜன்மத்தில் ஒரு ஒற்றுமை சூழல் வருமா என்பது சந்தேகமே.

மீண்டும் ஏதோ ஒரு வழியில் மஹிந்த பிரதமர் ஆட்சி அமைத்தால் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வராது.

தமிழர் தீர்வு என்பது மாகாண ஆட்சிதான்

தமிழர் தரப்பு இறுதியாக கேட்டு நிற்பது சமஷ்டி ஆட்சி .அதை சிங்களம் வழங்க தயாரில்லை .தமிழர் கோரி நிற்கும் சமஸ்டிக்கு ஏதாவது ஒரு நாடு பின்புலமாக நின்று சிங்கள அரசை நெருக்கும் அளவுக்கு யாருமில்லை.இந்தியா சமஷ்டிக்கு ஒரு போதும் ஆதரவில்லை.இந்தியாக்கு தமிழர் தீர்வில் அக்கறையே இல்லை.

அதனால் தற்போது இருக்கும் மாகாண ஆட்சியையே கொண்டு செல்லக்கூடிய நிலைதான் உள்ளது. அதனால் சம்பந்தர் காலத்துக்குள் இரண்டு மாகாணத்தையும் இணைத்து காணி போலீஸ் அதிகாரம் கேட்டு நிற்கப்போகின்றார்கள் .அதற்கு முதல் படிதான் .வடகிழக்கு இணைப்பு.கிழக்கு இணைய வேண்டுமா இல்லையா என்ற நிலை வருகின்ற போது கிழக்கு முஸ்லிம்களின் ஆதரவு வேண்டும்.

முஸ்லிகளின் ஆதரவு இல்லாதுபோனால் இணைப்பு சாத்தியமாகாது. அது சர்வஜன வாக்கடுப்பு என்று வந்தாலும் கிழக்கில் வாழும் முஸ்லிகளும் .சிங்களவர்களும் இணைத்து பிரிவுக்கு ஆதரவாக இணைப்புக்கு எதிராக வாக்களித்து விடுவார்கள். ஆக மொத்தத்தில் இணைப்புக்கு முஸ்லிகளின் அதரவு என்பது இங்கு மிகவும் முக்கியமானது.

ஆனால் இந்த இணைப்புக்கு முஸ்லிம் மக்களை ஒதுக்கி விட்டு ஹக்கீமை மட்டும் தமிழ் கூட்டமைப்பு நம்பி இருப்பது ஒரு விந்தையான விடயமாகவே உள்ளது. இந்த விடயத்தில் ஹக்கீமை மட்டும் நம்பி பலன் இல்லை என்பதை கூட்டமைப்பு இன்னும் புரிந்து கொள்ளவில்லையா என்பதும் ஒரு புதிராகவே உள்ளது.

தமிழ் கூட்டமைப்புக்கு வடக்குடன் கிழக்கு இணைய வேண்டும் என்ற எண்ணம் ஆசை இருக்குமானால் முஸ்லிம் அரசியல் வியாபாரிகளை விட்டு முஸ்லிம் மக்களை வெல்லக் கூடிய நகர்வுகளை நகர்த்த வேண்டும் .முஸ்லிம் மக்களுக்குள் தமிழ் கூட்டமைப்பு நகர வேண்டும்.முஸ்லிம் மக்களிடம் கூட்டமைப்பு அரசியல் செய்ய வேண்டும் .அதற்கான களத்தை அமைக்க வேண்டும் .அதற்கான நல்ல வளம் இருந்தும் களத்தை இன்னும் கூட்டமைப்பு செய்ய வில்லை.

சம்பந்தர் சொல்லும் ஒரு பக்குவமான படித்த முஸ்லிம் நபரை எமது முதலமைச்சராக ஏற்று கொள்வதற்கு நாம் எப்போதும் தயாராகவிருக்கின்றோம் என்றார்.

வடகிழக்கு இணைந்து மாகாண ஆட்சி நடக்குமானால் தொடர்ந்து முஸ்லிம் ஒருவர் முதல் அமைச்சராக இருப்பது என்ன நியாயம். ஒருமுறை ஒரு தமிழர் மறு முறை ஒரு முஸ்லிம் முதல்வர் என்ற ஒரு வரம்பு இல்லை என்றால் அங்கு இரண்டு இனத்தவர்களும் மோதிக்கொள்ளும் நிலைமை உருவாகும் .அப்போது கிழக்கு பிரிய வேண்டும் என்ற கோசம் உருவாகும்.

எனவே பேச்சளவில் இணைப்பு பற்றிப் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை முஸ்லிம் மக்களை வெல்லக் கூடிய முஸ்லிம் மக்களின் மனங்களை வெல்லக் கூடிய வெளிப்படையான நகர்வுகளை தமிழ் கூட்டமைப்பு செய்யாத வரை இணைப்ப்பு ஒரு போதும் சாத்தியமில்லை என்பதை அடித்து சொல்லுவோம்.

“ நம்மை ஆள்பவர்களை நாம் சரியாக தேர்ந்தெடுக்கவில்லை என்றால் நம்மை விட கேவளமானவர்களால் ஆட்சி என்ற கோதாவில் நாம் தண்டிக்கப்படுவோம்”

இந்த தேசம் அரசியல் வியாபாரமாக மாறி விட்டது .இந்த தேசம் அரசியல் வியாபாரிகளிடம் சிக்கித் தவிக்கின்றது .இந்த தேசம் இனவாதிகளின் ஆளிகைக்குள் நசுங்கித் தவிக்கின்றது.இந்த தேசம் கொள்ளைக் கார்களால் ஆழப்பட்டு சுரண்டப்பட்டு வருகின்றது.

உரிமை என்னும் கோசம் இங்கு பதவி பட்டங்களாகவும் மாறி விட்டது. முள்ளுத்துண்டுகளுக்கும் .எலும்புகளுக்கும் அள்ளுப்பட்டு செல்லும் முஸ்லிம் அரசியல் வியாபாரிகளுக்கு மத்தியில் எங்கிருந்து கிழக்கு இணைப்பு வரும்.?

-http://www.tamilwin.com

TAGS: